மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கார், வீடு, பயிர்களுக்கு அரசு தரும் காப்பீடு!

Published On:

| By Santhosh Raj Saravanan

government provide compensation for damage to crops cars or homes during monsoon

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் தேங்கியுள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அதேவேளையில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கிக்கொண்டன. இத்தகைய சூழல்கள் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், சரியான காப்பீட்டுத் திட்டம் இருந்தால் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டைப் (Compensation for damage) பெற முடியும்.

வீட்டுக் காப்பீடு எவ்வாறு உதவுகிறது?

வெள்ளம் அல்லது பிற இயற்கை பேரிடர்களால் உங்கள் வீட்டிற்குச் சேதம் ஏற்பட்டால் வீட்டுக் காப்பீட்டுத் திட்டம் அதற்கான பாதுகாப்பை வழங்குகிறது. வீடு மட்டுமல்லாமல், மின்சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் (ஃபர்னிச்சர்), நகைகள், ஆடைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுக்கும் இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறலாம்.

ADVERTISEMENT
இழப்பீடு கோரும்போது (Claim) கவனத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தாலோ அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் ஏதேனும் சேதமடைந்தாலோ முதலில் சேதமடைந்த பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், கூடிய விரைவில் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மதிப்புமிக்க பொருட்களின் பட்டியல், கொள்முதல் ரசீதுகள் மற்றும் காப்பீட்டு ஆவணங்களை முன்கூட்டியே பாதுகாத்து வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். இது இழப்பீடு கோரும் நடைமுறையை எளிதாக்குவதுடன் விரைவாக இழப்பீடு கிடைப்பதையும் உறுதி செய்யும்.

மழைக்காலத்தில் வாகனம் பழுதடைந்தால் இழப்பீடு கிடைக்குமா?

வெள்ள நீரில் உங்கள் கார் அல்லது இருசக்கர வாகனம் சேதமடைந்தால், விரிவான மோட்டார் காப்பீடு (comprehensive motor insurance) மூலம் இழப்பீடு கோரலாம். உங்களிடம் என்ஜின் பாதுகாப்பு (engine protection) வசதி இருந்தால் தண்ணீர் புகுதலால் என்ஜினுக்கு ஏற்படும் சேதத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனம் முழுமையாகச் சேதமடைந்தால் காப்பீட்டு ஒப்பந்த விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்கப்படலாம்.

ADVERTISEMENT
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் நிலைமை மோசமாக உள்ளது. பல இடங்களில் விவசாயிகளின் பயிர்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. விளைநிலத்தில் உள்ள பயிர்கள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்கள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இது விவசாயிகளிடையே தங்கள் வருமானம் குறித்த ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. பயிர் இழப்புக்குப் பிறகு, இந்த இழப்பை எவ்வாறு ஈடுசெய்வது என்ற கேள்வி விவசாயிகளிடம் உள்ளது.

இத்தகைய சூழலில், மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு ஒரு பெரும் நிவாரணமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ், பயிர் இழப்பு அல்லது விளைச்சல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share