ரூ.100 கோடி மோசடி : பிடி அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து! 

Published On:

| By Kavi

100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிடி அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் பதிவு செய்யப்படாத கூட்டமைப்பு தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 

இந்த நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று பி.டி.அரசகுமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 28) நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகர் அமர்வில் நடைபெற்றது. 

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அரசகுமாரின் மனைவி தன் கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலனை செய்வதில் 13 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார். 

ADVERTISEMENT

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், அரசகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது. அதை ரத்து செய்கிறோம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share