ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1) தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நேற்று (டிசம்பர் 31) சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 56,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ.40ம் சவரனுக்கு ரூ. 320ம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் ரூ. 7,150-க்கும், ஒரு சவரன் ரூ. 57,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 98க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் நாளே தங்கம் விலை உயர்ந்திருப்பது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘விடா முயற்சி’ வெளியிடவே பெரும் முயற்சி… என்னதான் பிரச்னை?
டாப் 10 செய்திகள்: புத்தாண்டு கொண்டாட்டம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் வரை!