ஹேப்பி நியூ இயர்!
2024ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இதை முன்னிட்டு உலகெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் நள்ளிரவு 12 மணிக்கு பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடினர்.
கோயில், தேவாலயங்களில் வழிபாடு!
புத்தாண்டு பிறந்ததையொட்டி நேற்று இரவு முதல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மத்திய அமைச்சரவை கூட்டம்!
புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1)பிரதமர் மோடி தலைமையில், அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
மழை அப்டேட்!
இன்று முதல் வரும் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மாவட்ட ரயில்களின் நேர மாற்றம்!
தென் மாவட்ட ரயில்களின் கால அட்டவணை இன்று (ஜனவரி 1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது என்று மதுரை ரயில்வே கோட்டம் கூறியுள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ் எப்போது?
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா கூறியுள்ளது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா!
குமரியில் கடலுக்கு நடுவில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இன்றுடன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில் தமிழக அரசு வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு – டோக்கன் எப்போது?
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறவுள்ள பயனாளிகளுக்கு வரும் 3-ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இட்லி கடை ஃபர்ஸ்ட்லுக்!
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை… மகளை இழந்த துக்கம் காரணமா?
பாலியல் வன்கொடுமைகளின் வேர்கள் வெகு தொலைவில் இருக்கின்றன!
ஹெல்த் டிப்ஸ்: கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது எப்படி?