‘விடா முயற்சி’ வெளியிடவே பெரும் முயற்சி… என்னதான் பிரச்னை?

Published On:

| By Kumaresan M

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் ரிலீஸ் ஆகாததால், ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், விடா முயற்சி வெளியிடப்படும் என்பதால் குட் பேட் அக்லி படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது.தொடர்ந்து, விடாமுயற்சி டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. டீசரிலும் கூட பொங்கல் ரிலீஸ் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று இரவு சில தவிர்க்க முடியாத காரணத்தால், விடாமுயற்சி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகப் போவதில்லை. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்று தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்து விட்டது. இப்போது, குட் பேட் அக்லி படமும் வெளியாகாமல் அஜித் ரசிகர்கள் கடுப்படைந்துள்ளனர். விடா முயற்சி படம் எதிர்பார்ப்பார்த்த மாதிரி வரவில்லை . இதுதான், படம் வெளியாக தாமதமாவதாக சொல்லப்படுகிறது. போட்டி கடுமையாக இருப்பதால் படுத்து விடக் கூடும் என்தால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் பொங்கல் பண்டிகை முடிந்து விரைவில் விடா முயற்சி வெளியாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள கேம் சேஞ்சர் படம்தான் பொங்கலுக்கு ரிலீஸ் வசூலை அள்ளி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடா முயற்சி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் வணங்கான் படம் வெளியிட நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், வணங்கான் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!

வேலைவாய்ப்பு : CBSE-யில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share