தீபாவளிக்கு தங்கம் வாங்கப் போறீங்களா? செலவைக் குறைக்க 3 வழிகள்!

Published On:

| By Minnambalam Desk

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவதை பல குடும்பங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன. ஆனால் கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், சிறிய அளவில் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்குக்கூட பட்ஜெட் பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நகை வாங்கினால் கூடுதல் செலவு!

ADVERTISEMENT

தங்கத்தின் விலை மட்டுமல்லாமல், நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் தங்கத்தின் அடிப்படை விலையைக் காட்டிலும் மொத்த செலவு 10 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

அதனால், பண்டிகைக்குத் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலவிடாமல் திட்டமிடுவது முக்கியம்.

ADVERTISEMENT

கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்!

ஒரே நாளில் மொத்த பணத்தையும் செலுத்தி தங்கம் வாங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவுகளில் வாங்கலாம் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். இதன்மூலம் விலை ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தை ஓரளவு சமாளிக்க முடியும். 

ADVERTISEMENT

தங்கத்தை நேரடியாக கையில் வைத்திருக்க விரும்புபவர்கள் ஆபரணங்களுக்குப் பதிலாக ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் அல்லது பார்களை பரிசீலிக்கலாம். நகைகளுடன் ஒப்பிடும்போது இவற்றில் செய்கூலி குறைவாக இருக்கக்கூடும். 

ரூ.500-ல் Gold ETF முதலீடு!

தங்கத்தை நகையாக வாங்குவது மட்டுமே முதலீடு அல்ல. Gold ETF-களில் SIP முறையில் மாதந்தோறும் ரூ.500 அல்லது ரூ.1,000 போன்ற சிறிய தொகையிலிருந்தும் முதலீட்டைத் தொடங்கலாம். இதற்கு தங்கத்தை வீட்டில் பாதுகாத்து வைக்கும் சிக்கலும் இருக்காது. 

எனவே இந்தப் பண்டிகைக் காலத்தில் தங்கம் வாங்கும்போது, நகையின் அழகை மட்டும் பார்க்காமல் அதனுடன் வரும் கூடுதல் செலவுகளையும் கணக்கிட்டு முடிவு செய்வது அவசியம்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share