சென்னையில் இன்று (டிசம்பர் 23) ஒரு கிராம் தங்கம் ரூ. 200 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் ஒரு கிராம் ரூ.3 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் காணப்படுகிறது.
முன்னதாக, டிசம்பர் 15 அன்று, சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 1,00,120 ஆக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 17 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ. 1,00,000 ஆக விற்பனையான நிலையில், நேற்று மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்து ரூ. 1,00,560க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் மேலும் ரூ. 1600 வரை உயர்ந்துள்ளது. வெள்ளியும் ஒரு கிலோவுக்கு ரூ.3000 வரை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று ஒரு கிராம் ரூ. 200 உயர்ந்து ரூ. 12,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 உயர்ந்து ரூ. 1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல்18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.160 உயர்ந்து ரூ.10,650க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
ஏழைகளின் தங்கம் என அழைக்கப்பட்ட வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ. 3 உயர்ந்து ரூ.234க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 3000 உயர்ந்து ரூ. 2,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 22-12-2025 | 1,00,560 |
| 21-12-2025 | 99,200 |
| 20-12-2025 | 99,200 |
| 19-12-2025 | 99,040 |
| 18-12-2025 | 99,520 |
| 17-12-2025 | 99,200 |
| 16-12-2025 | 98,800 |
| 15-12-2025 | 1,00,120 |
| 14-12-2025 | 98,960 |
| 13-12-2025 | 98,960 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 22-12-2025 | 231 |
| 21-12-2025 | 226 |
| 20-12-2025 | 226 |
| 19-12-2025 | 221 |
| 18-12-2025 | 224 |
| 17-12-2025 | 222 |
| 16-12-2025 | 211 |
| 15-12-2025 | 215 |
| 14-12-2025 | 210 |
| 13-12-2025 | 210 |
