சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில் “GENZ DMK” என்ற தலைப்பில் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 30-வயதுக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட GEN Z இளைஞர்கள் பங்கேற்றனர். சமூக வலைதளங்களில் களமாடுவோம் என்பது உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, திமுக ஐடிவிங் செயலாளர் முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று GEN Z- இளைஞர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் அளித்தனர்.
