டிஜிட்டல் திண்ணை: ஜெம் வீரமணி கேஸ்- யாஸ்மின், மகேஷ்குமார் சஸ்பெண்ட்? அடுத்து அருண்? அமைச்சரிடம் பேசிய ஜாதி கட்சி தலைவர்- பரபர தகவல்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், நேற்று வாசலில் காவல் நின்றது…இன்று வாசலில் காவல் வந்தது…”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. போலீஸ் ஸ்டோரிதானே.. கரெக்ட்டா சொல்லிட்டனா?

ADVERTISEMENT

ஆமாங்க ப்ரோ.. நாம ஆகஸ்ட் 30-ந் தேதி ‘ஜெம்’ வீரமணி கேஸை பத்தி விலாவாரியாக பேசியிருந்தோம் இல்லையா? “சிறுமிகளை சீரழித்த ‘ஜெம் வீரமணி’ சிக்கியது எப்படி? தலையிட்ட ‘தலைகள்’.. தப்ப விட்ட ‘கறுப்பு ஆடுகள்’? பரபர தகவல்கள்”ன்னு சொல்லியிருந்தோம்..

இப்ப ‘தலையிட்ட தலை’களும் ’தப்பவிட்ட கறுப்பு ஆடுகளும்’ அடுத்தடுத்து யார் யாருன்னு வெளியே வந்துகிட்டே இருக்குதுங்க ப்ரோ.

ADVERTISEMENT

நாம சொன்னபடியே காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் ஓபனாக பேசிகிட்டு இருக்கிறார். ஜெம் வீரமணி கேஸில் தான் தலையிட்டது உட்பட எல்லாத்தையும் சொல்றார்.. அதே மாதிரி, ”தென் மாவட்ட ஜாதி தலைவர் ஒருத்தர் பஞ்சாயத்து பேசினார்”ன்னு சொல்லி இருந்தோம்.. அந்த ஜாதி கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் அப்படிங்கிறதும் வெளிச்சத்துக்கு வந்துருச்சு..

ஜான்பாண்டியனும் ஓபனாக, ஜெம் வீரமணி கேஸில் தன்னோட ரோல் என்ன அப்படிங்கிறதை பிரஸ் மீட் வெச்சு சொல்லிகிட்டு இருக்கிறார்..

ADVERTISEMENT

இந்த கேஸ் பத்தி சிஎம் விஜய்கிட்ட சில ஐபிஎஸ் லாபியிஸ்டுகள் பேசிப் பார்த்தாங்க.. அதை எல்லாம் சிஎம் விஜய் ஏத்துக்கலை..

”இந்த கேஸில் யாராக இருந்தாலும் ஆக்‌ஷன் எடுத்திடுங்க”ன்னு சிஎம் விஜய் ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டதுக்கு பிறகு சென்னை கமிஷனர் அமல்ராஜ் இந்த கேஸில் ரொம்பவே தீவிரமாக இறங்கிட்டார்..

ஜெம் வீரமணி சிக்கிய போதே, சீனியர் வழக்கறிஞர் ஒருவர் கமிஷனர் அமல்ராஜை பார்த்து பேசினாராம். அவர் பேசுனதை எல்லாம் பொறுமையா கேட்டுகிட்ட இருந்த கமிஷனர் அமல்ராஜ், “நீங்க பேசுனவரைக்கும் கேட்டாச்சு.. இனி கேட்கிறதுக்கு ஒன்னும் இல்லை.. இங்கிருந்து நீங்க கிளம்பலைன்னா அரெஸ்ட் பண்ணி உட்கார வெச்சுடுவேன்”ன்னு வார்னிங் கொடுக்க அந்த சீனியர் லாயரும் எஸ்கேப் ஆகிட்டாராம்.

இதுக்கு அப்புறமா நேத்து காலையில இருந்து ஒரே பரபரப்புதான்.. ஜெம் வீரமணி கேஸை விசாரிச்ச, விபாசர தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மின், விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தாங்க..

அப்புறமாக போலீஸ் கமிஷனரா இருந்த அருண், அப்ப உதவி கமிஷனராக இருந்த- இப்ப கோவை கமிஷனராக இருந்த கண்ணன், யாஸ்மின்- மூணு பேருமே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்காங்க..

இதன் அடுத்த டெவலப்மெண்ட்டா இன்னைக்கு, “மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ், சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக ஊடகத் தொடர்பு அலுவலர் முத்தரசி ஐபிஎஸ், சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகியோரை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு’ அமைக்கப்பட்டிருக்கு.

அடுத்ததாக என்ன நடக்க போகுதுன்னு நம்ம சோர்ஸ்களிடம் விசாரிச்சப்ப, “காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் புகார் கொடுத்ததாக சொல்ற ஏசி, இப்ப கோவை கமிஷனரா இருந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிற கண்ணன்.. அவரும் எனக்கு புகார் வந்தது.. அதை கமிஷனர் அருணுக்கு அனுப்பிட்டேன்னு சொல்றார்..

இதுக்கு அப்புறமா கமிஷனராக இருந்த அருணுக்கு ரொம்பவே நெருக்கமானவரான அண்ணா நகர் கவுதமை போலீஸ் விசாரிச்சது.. இந்த கவுதம்கிட்ட அருணின் பல கோடி ரூபாய் பணம் இருக்கு.. அருணின் மகள்கள் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ கார்கள் எல்லாம் கவுதம் கம்பெனி பெயரில்தான் இருக்குது.. இந்த கவுதம்கிட்ட போலீஸ் விசாரிச்சதுல அருணை பற்றிய பல விஷயங்களை சொல்லிட்டார். கவுதம்கிட்ட வாங்குன தகவல்களை வெச்சுதான் அருண் மேல ஆக்‌ஷன் எடுக்க முடிவு செஞ்சாங்க.. இப்ப முதல் கட்டமா அருண், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்..

இந்த கேஸை விசாரிச்சவர்களில் ஒருவரான மகேஷ்குமார் போன திமுக ஆட்சியில தொடர்ந்து 3 வருஷம் நீலாங்கரையிலே இன்ஸ்பெக்டரா இருந்திருக்கிறார்.. திமுக ஆட்சியில் மேலிட ‘செல்வாக்கு’ம் அவருக்கு இருந்தது. இன்னொரு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு இருக்கு.. ராஜலட்சுமி மேல லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி விமலா ஆக்‌ஷன் எடுத்ததால, விஜிலன்ஸ் கமிஷனரா அருண் இருந்தப்ப விமலாவை சஸ்பெண்ட் செஞ்சு சர்ச்சையானது.

இந்த கேஸில் இன்னைக்கு அல்லது நாளைக்கு யாஸ்மின், மகேஷ்குமார் ரெண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட இருக்காங்க.. அருண், கண்ணன் மேல அடுத்த ஆக்‌ஷன் பத்தி டிஸ்கஷன் நடந்துகிட்டு இருக்கு.. சஸ்பெண்ட்-ல் தொடங்கும் இந்த ஆபரேஷன் கைது வரைக்கும் போக வாய்ப்பிருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ.

ஜெம் வீரமணி கேஸ்ல பலரோட பேரும் அடிபட்டுகிட்டே இருக்கே?

ஆமாங்க ப்ரோ.. ஜெம் வீரமணியோட சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் முதல்ல கைது செய்யப்பட்டாங்க.. அதுக்கு அப்புறமாக வீரமணிகிட்ட 23 வருஷமா வேலை பார்த்த கணேசனையும் போலீஸ் கைது செஞ்சிருக்காங்க.. கணேசன் அக்கவுண்ட்டை போலீசார் செக் செஞ்சப்ப ஷாக் தகவல்கள் கிடைச்சிருக்காம்.

இதை பத்தியும் நாம விசாரிச்சப்ப, “ஜெம் வீரமணிக்கு வலதுகரமா இருந்தவர்தான் கணேசன்.. அவரோட அக்கவுண்ட்ல இருந்தும் சில போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் டிரான்ஸ்பர் ஆகி இருக்கு.. இதுல சில பத்திரிகையாளர்களுக்கும் பணம் போயிருக்கு..

ஜெம் வீரமணி- கணேசன் தரப்பில இருந்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பணம் செட்டில் மெண்ட் விஷயத்துல இறங்கி செஞ்சவர்தான் பிரகாஷ்.. அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக தொடர்ந்து பதவியில இருக்கிற கண்ணையாவின் மகன்தான் இந்த பிரகாஷ். இப்ப இவர் வெளிநாட்டில் இருக்கிறார்.. இவருக்கு எதிரா லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கு..”ன்னும் சொல்றாங்க ப்ரோ.

இந்த கேஸில பொலிட்டிக்கலா?

ஜெம் வீரமணி கூட அவரு நெருக்கம்.. இவரு நெருக்கம்னு அக்கப்போர் பேசிகிட்டுதான் இருக்காங்க.. இன்னொரு பக்கம் ஜெம் வீரமணிக்காக, திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ‘கொங்கு மண்டல’ ஜாதி கட்சித் தலைவர் ஒருவர் அதே கொங்கு மண்டல அமைச்சர்கிட்ட பேசிப்பார்த்தாராம்.. ஆனால் அந்த அமைச்சரோ, “அண்ணே.. இந்த விவகாரத்துல எல்லாம் தலையிடவே முடியாது.. இது சீரியசாக போயிகிட்டு இருக்கு”ன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டாராம்.

சரிங்க ப்ரோ.. ஜெயில்ல ஜெம் வீரமணி எப்படி இருக்கிறாராம்?

ஜெயில் இருக்கும் வீரமணி, வார்டன்களிடம் பேசும் போது ரொம்பவே புலம்புறாராம்.. “இப்படி எல்லாம் நடக்காதுன்னு சொல்லியே என்கிட்ட பெரும் பணம் வாங்கினாங்க.. நானும் கொடுத்தேன். ஆனா யாரும் எதுவும் செய்யலை…”ன்னு சொல்றாராம்.

அதே நேரத்துல ஜெம் வீரமணியை சிறையில் சந்திக்கும் அவருக்கு நெருக்கமானவங்க, “இன்னும் கொஞ்சம் மீடியாக்களுக்கு எல்லாம் செலவு செய்யலாம்.. கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கும்”ன்னு சொல்ல.. “யப்பா அதெல்லாம் வேண்டாம்.. இதுக்கு மேல என்ன இருக்குது.. கொடுத்தவரைக்குமே போதும்.. இனி நடக்குறது நடக்கட்டும்”ன்னு சொல்லிட்டாராம்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேஸ் அப்படிங்கிறதால இந்த கேஸின் போக்கு எப்படிங்கிறதை இந்தியாவே உன்னிப்பா கவனிச்சுகிட்டுதான் இருக்கு.. இப்ப சிபிஐ விசாரணை கேட்டு தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பாக மனு போட்டிருக்காங்க.. இப்படி ஒரு மனு வரும்னு தெரிஞ்சுகிட்டுதான் இன்னைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை அதுவும் பெண் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தவெக கவர்மெண்ட் அறிவிச்சிருக்காம்..

இதை பத்தி உயர்நீதிமன்றத்துல தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரணைகளை தொடர்ந்து கவனிச்சுகிட்டு வருகிறவங்ககிட்ட பேசுனப்ப, “என்னதான் மாநில அரசு ஆக்‌ஷன்ஸ் எடுத்தாலும் ஸ்டேட் போலீஸ் அதிகாரிங்க சம்பந்தப்பட்ட கேஸாவும் இருக்கு.. ஸ்டேட் போலீஸ் அதிகாரிங்க மேல இருக்கிற கேஸை ஸ்டேட் போலீஸ் விசாரிச்சா எப்படி சரியா வரும்னு நார்மலாகவே சிபிஐக்குதான் இந்த கேஸ் போகக் கூடிய சான்ஸ் இருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share