டிஜிட்டல் திண்ணை: ‘ஜெம் வீரமணி’ வழக்கு… தங்க கட்டி தந்தவரின் வாக்குமூலம்- அருண் அதிர்ச்சி- அடுத்து?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும்,

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”
காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

ADVERTISEMENT

என்னங்க ப்ரோ.. ஆரம்பிக்கும்போதே பட்டினத்தார் பாடலுடன்?

வந்து விழுகிற தகவல்களை எல்லாம் கேட்கும் போது இந்த வரிகள்தான் நினைவுக்கு வருதுங்க ப்ரோ.. யாரை சொல்றேன்னு புரியுதுங்களா ப்ரோ?

ADVERTISEMENT

ஆஹா.. ‘ஜெம் வீரமணி’ விவகாரம்தான்.. இந்த கேஸில் என்ன அப்டேட் ப்ரோ?

சில நாட்களுக்கு முன்னர் ஜெம் வீரமணியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க ப்ரோ.. அப்ப, ரொம்பவே பரிதாபமாக கையில ஸ்டிக் வெச்சுகிட்டு நடந்து போனார் வீரமணி..

ADVERTISEMENT

இவ்வளவு உடல்நலன் பாதிப்போடவா ஜெயில்ல இருக்கிறார் வீரமணின்னு நாம விசாரிச்சப்ப, “ஜெயில்ல எல்லாம் வீரமணி ஸ்டிக் வெச்சு நடக்கிறது இல்லை.. நார்மலாதான் இருக்கிறார்.. நல்லாதான் நடக்கிறார்.. பேசுகிறார்… ரெகுலரா யோகா செய்யுறார்.. சுவத்துல சாய்ந்தபடியே சில பயிற்சிகள் செய்யுறார்.. அதே மாதிரி ரெகுலரா உடற்பயிற்சிகளையும் செஞ்சுகிட்டுதான் இருக்கிறார்” என்கின்றனர்.

ஜெம் வீரமணி கேஸில தொடர்ந்து நாம விசாரிச்சப்ப, இப்படியுமான்னு கேட்கிற அளவுக்கு ‘சம்பவங்களை’ அடுக்குகிறார்கள் ப்ரோ..

அதாவது, ஜெம் வீரமணிகிட்ட சிக்கினது 10, 15 பேர் எல்லாம் இல்லைங்களாம் ப்ரோ.. 100-க்கும் மேற்பட்டவங்களாம்.. பெரும்பாலும் சிறுமிகள்.. அதுவும் ரொம்பவே ஏழ்மையான, சமூகத்துல கீழ்நிலையில இருக்கிற சிறுமிகள்தானாம்.. ஒருமுறை வந்த பெண்களை திரும்ப கூப்பிடுறது எல்லாம் ‘சாருக்கு’ வழக்கம் இல்லையாம்.. ஒருமுறை வந்துட்டு போயிட்டாலும் தீபாவாளி மாதிரி நாட்களில் புது டிரெஸ், பணம் ரூ5,000-ன்னு கொடுத்துகிட்டும் வந்திருக்கிறார்.. ஜெம் வீரமணியால பாதிக்கப்பட்ட பெண்கள்கிட்ட விசாரிக்கிறப்ப, எங்களுக்கு உதவிகளையும் செஞ்சாருன்னும் சிலர் சொல்றாங்களாம்..ப்ரோ.

இந்த விசாரணையில தைரியமாக புகார் கொடுக்கும் பெண்களோட வாக்குமூலங்களை முழுமையாக பதிவு செய்றாங்க.. அக்டோபர் 12-ந் தேதி வரைக்கும் மொத்தம் 7 வழக்குகள் போடப்பட்டிருக்கு.. இதே மாதிரி வீரமணி மேல தொடர்ந்து மேலும் பல வழக்குகள் பதிவாகப் போகுதாம்..

ப்ரோ.. இந்த கேஸில சிக்கின மாஜி கமிஷனர் அருண் அப்டேட் சொல்லுங்க?

ஜெம் வீரமணி கேஸில் புகார் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன். இவர் புகார் கொடுக்கிறதுக்கு முன்னாடி 6 மாசமாகவே இந்த விவகாரத்துல சம்பந்தட்டுதான் இருந்தார்.. ஜெம் வீரமணியின் ‘தோழி’ சாந்திக்காக ஜெம் வீரமணிகிட்ட பஞ்சாயத்து பேச போய், ஜான் பாண்டியனால் மிரட்டப்பட்டார். இதனால் இந்த விவகாரத்தில் சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ரஞ்சன் பின்னர் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த கேஸில் என்னவெல்லாம் நடந்ததுன்னு மறுபடியும் நாம் சோர்ஸ்களிடம் விசாரிச்சப்ப, ”ரஞ்சன் புகார் கொடுத்தது என்னவோ, சென்னை தெற்கு மண்டல காவல் கூடுதல் ஆணையராக இருந்த கண்ணனிடம்தான்.. அவர்தான் அப்ப கமிஷனராக இருந்த அருணிடம், “இப்படி ஒரு புகார் வந்துருக்கு சார்”ன்னு கொடுத்தார்.. இந்த புகாரை வாங்குன அருண், அதை விபச்சார தடுப்பு பிரிவுக்கும் அனுப்பிட்டார்.. ஆனால் விபச்சார தடுப்பு பிரிவு ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு கேட்கிறப்ப, “கமிஷனரா இருந்த அருண்சார் வாய்மொழியா ஆக்‌ஷன் எடுக்காதீங்க”ன்னு சொன்னார்… அதனால நாங்க கிடப்பில போட்டோம்”ன்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காங்க..

இதுக்கு பிறகுதான் எல்லாமே நடந்தது. முதலில் வீரமணி மகன்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க.. அவரு வெளிநாடு போனதால மகள்கிட்டேயும் பேசுனாங்க.. இதுக்கு அப்புறமா ஜெம் வீரமணி மகளின் நெருங்கிய நண்பரான ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ், ஜெம் வீரமணிக்கும் மற்றவங்களுக்கும் இடையே டீல் பேசினார்.. இந்த பிரகாஷுக்கு தன்னோட கம்பெனியில அட்வைசருன்னு போஸ்டிங் போட்டு பெருமளவு பணமும் கொடுத்திருந்தார் ஜெம் வீரமணி.

இந்த டீலிங்குகள் எல்லாம் ”ரொக்கமா இல்லாம” தங்க கட்டிகளில்தான் நடந்திருக்கு.. 1 தங்க கட்டி அதாவது 1 கோல்ட் பார் அப்படிங்கிறது 12 கிலோ ப்ரோ.. இந்த தங்க கட்டிகள் தி.நகர் நகை கடைகளில் மட்டுமில்லாமல் இன்னொரு பக்கம் சவுகார்பேட்டையிலும் ஆர்டர் கொடுத்திருக்காங்க.. அந்த சவுகார்பேட்டை சப்ளையர் யாருன்னு கண்டுபிடிச்சு போன போலீஸூக்கு ‘அல்வா’ மாதிரி தகவல் கிடைச்சிருக்கு..

ஏன்னா தங்க கட்டிகளை ‘டோர் டெலிவரி’ செஞ்ச நபரே, ”நான் தங்க கட்டிகளை டெலிவரி செஞ்ச வீடுகள் எல்லாம் இதுதான்”ன்னு தெள்ள தெளிவாக காட்டி கொடுத்துட்டார்..

இதே சோர்ஸ்கள் நம்மிடம் சொன்ன கூடுதலான ”ஷாக்” தகவல்கள் என்னான்னா, “போலீசில தம் மேல புகார் கொடுத்திருக்காங்களே.. இதை சமாளிக்க இத்தனை கோடி கொடுக்கிறோமேன்னு கொஞ்சமும் கவலையோ பதற்றமே இல்லாமல், தன்னோட ‘இச்சை வெறி’யை தொடர்ந்து கிட்டுதான் இருந்தார் வீரமணி.. இது ஒருவகை மனநோய் மாதிரிதான் சார்”ன்னும் சொல்றாங்க ப்ரோ..

சரி இப்ப மாஜி கமிஷனர் அருண் கேஸில் என்ன நடக்க போகுதாம் ப்ரோ?

இந்த கேஸில சிக்குனதால மாஜி கமிஷனர் அருண், முன்னாள் சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராகவும் கோவை கமிஷனராகவும் இருந்த கண்ணன், சென்னை கோயம்பேடு காவல் உதவி ஆணையராக இருந்த யாஸ்மின்.. இந்த 3 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டாங்க.. இவங்க எல்லாமே விசாரணை வளையத்தில இருக்கிறவங்க..

இதுல கண்ணன் ரோல் பெருசா இல்லையாம்.. அதாவது ரஞ்சன் கொடுத்த புகாரை வாங்கினவர் கண்ணன்.. அவர் கமிஷனராக இருந்த அருண்கிட்ட கொடுத்துட்டார்.. அவர்கிட்ட விசாரிச்சப்பவும் இதைத்தான் சொல்லி இருக்கிறார்.. அதனால அவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்து விடுவிச்சு புதுசா போஸ்டிங் போட சான்ஸ் இருக்குன்னு.. அருண்மேல கடுமையான நடவடிக்கை பாயலாம்”ன்னு கோட்டை வட்டாரங்கள் சொல்றாங்க ப்ரோ.

எந்த நேரத்துலயும் தமக்கு எதிராக எதுவும் நடக்கலாம் அப்படிங்கிற தகவல் வந்ததால திமுக தரப்பிடம் உதவி கேட்டு தகவல் அனுப்பியிருக்கிறார் மாஜி கமிஷனர் அருண்.. ஆனால் அந்த பக்கத்தில் இருந்து எந்த பதிலும் வரலையாம் ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share