ஆண்களுக்கும் இலவச பேருந்து? அமைச்சர் சிவசங்கர் பதில்!

Published On:

| By Kavi

ஆண்களுக்கும்  விடியல் பயண திட்டம் கிடைக்குமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.  Free buses for men

தமிழக  சட்டப்பேரவையில்  துறை  ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இன்று (ஏப்ரல் 8) திருவாடானை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம கருமாணிக்கம் “பெண்களுக்கு விடியல் பயணம் இருப்பது போல ஆண்களுக்கும் விடியல் பயணம் கிடைக்குமா? என்று  கேள்வி எழுப்பினார். 

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,  “ஆண்களுக்கு இலவச பயணம் குறித்த உங்கள் ஆர்வம் தெரிகிறது.

பெண்கள் முன்னேற்றம் பெற வேண்டும், வாழ்க்கையில் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக கலைஞர் உரிமைத்தொகை, மகளிர்  விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். எதிர் காலத்தில்  அரசின் நிதி நிலை சீரான பிறகு இவையும்  கருத்தில்  எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

பழைய பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றப்படுமா என்ற கேள்விக்கு,  “திமுக அரசு அமைந்த பிறகு 3400 பழைய பேருந்துகள் புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிய பேருந்துகள் வர வர பழைய பேருந்துகள் மாற்றப்படும்” என்று கூறினார்.  Free buses for men

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share