ADVERTISEMENT

மூட்டு வலி நீங்கி எலும்புகள் வலிமையாக.. இந்த உணவுகளை பாலோ பண்ணுங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

foods to relieve joint pain and strengthen bone health

மூட்டு வலி நீங்கி எலும்புகள் வலிமையாக மாற சில உணவு முறைகளை நாம் பின்பற்றலாம்.

முன்பு எல்லாம் மூட்டு வலி, முழங்கால் வலி பிரச்சனைகள் எல்லாம் வயதானவர்களுக்கே வரும். ஆனால், மாறிவரும் வாழ்கை முறைகள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் மூட்டு, எலும்புகள் வலிமையில்லாமல் போய்விடுகின்றன.

ADVERTISEMENT

இளைஞர்களுக்கு பொதுவாக மூட்டு வலி, இடுப்பு, முழங்கால் வலி ஏற்படுகிறது. முதியவர்களுக்கு எலும்பு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் வர வாய்ப்புள்ளது. பெண்களுக்கு கால்சியம் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்களால் எலும்பு, மூட்டுப் பிரச்சனைக்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது. எலும்பு வலிமைக்கு கால்சியம் மாத்திரைகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது.

அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எலும்புகள் வலுப்படுவதோடு மட்டுமின்றி வயதாகும்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எலும்புகளை உறுதியாக்கி மூட்டு வலியை குறைக்கும் உணவுப் பொருட்கள் குறித்து பார்ப்போம்.

ADVERTISEMENT

எள் விதைகள் (Sesame seeds) : எள் எலும்புகளுக்கு இயற்கையான மருந்தாக உள்ளது. எள் விதைகளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எள் சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.

ராகி உணவு (Ragi strengthens bones) : ராகியில் பாலை விட அதிக கால்சியம் சத்துக்கள் உள்ளன. ராகி தோசை, உப்புமா அல்லது ரொட்டியை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ராகி அல்வா அல்லது லட்டு செய்து சாப்பிட வைக்கலாம். ராகி எலும்பு வளர்ச்சி மற்றும் ஒன்றுகூடுவதற்கு உதவி புரிகிறது.

ADVERTISEMENT

பச்சை காய்கறிகள், கீரைகள் (Green leafs) : எலும்புகள் வலுவாக காய்கறிகள், கீரைகள் மிகவும் அவசியம். கீரை, வெந்தயம், கடுகு ஆகியவற்றில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தி முறிவு அபாயத்தில் இருந்து பாதுகாக்கின்றன.

உலர் பழங்கள் (Dry fruits and nuts) : பாதாம், வால்நட் உள்ளிட்ட உலர் பழங்கள், கொட்டைகளில் எலும்புகளுக்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளன. 5 – 6 பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அழற்சியை குறைத்து எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. அதேபோல உலர் பழங்களில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் ஆகியவை எலும்புகளை உள்ளிருந்து வலுப்படுத்துகின்றன.

இந்த உணவுகளை சரியான விகிதத்தில் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்பு பலவீனம், மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share