நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியமானது. இந்த கால்சியத்தை எலும்பு கிரகிக்க உதவுவது வைட்டமின்-டி. How to get vitamin D
ஒருவர் உணவின் மூலம் கால்சியம் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால் போதாது. வைட்டமின்- டி இல்லையென்றால் கால்சியம் நமது எலும்புகளில் தங்காமல் வெளியேறிவிடும். இன்சுலின் சுரக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இதய நோய்கள் வராமல் தடுக்க வைட்டமின்-டி கண்டிப்பாகத் தேவை என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். How to get vitamin D
மேலும், “வைட்டமின்-டி கிடைப்பதற்காக மருந்து, மாத்திரைகள், பழங்கள், காய்கறிகள் என எதையும் வாங்கிச் சாப்பிட வேண்டியது இல்லை. தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளி உடலில் பட்டாலே போதும். காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் இருக்கும் சூரிய ஒளிதான் உடலுக்கு நல்லது.
இந்தத் தருணத்தில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகள், அரை மணி நேரம் செய்வதன் மூலம் வைட்டமின்- டி சத்து உடலுக்குக் கிடைப்பதோடு, தசைகள் வலிமை பெறும், எலும்பு உறுதியாகும்” என்றும் கூறுகிறார்கள்.
“அப்படி வெயிலில் நிற்க முடியாதவர்களுக்கு, வைட்டமின்-டி ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் தேவையான வைட்டமின்-டி கிடைக்கும். கீரை, பாதாம், வால்நட், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் மீன், முட்டை ஆகிய பொருள்களில் மிகவும் சிறிதளவு வைட்டமின்-டி உள்ளது.
வெயிலில் போகும்போது சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தோலில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். அழகுக்காகப் பூசப்படும் இத்தகைய க்ரீம்கள், தோலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளைத் தடுப்பது மட்டுமின்றி, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியம் என்பது அறைக்குள் இல்லை. வெயிலில்தான் கிடைக்கும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.