கொழுப்பு கல்லீரல் பாதிப்பு: ஆரம்பத்தில் தெரியாத ஆபத்து!

Published On:

| By Minnambalam Desk

கல்லீரலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதே Fatty Liver எனப்படும் கொழுப்பு கல்லீரல் பிரச்னை.

ஆரம்ப கட்டத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், பலரும் இதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

ADVERTISEMENT

கல்லீரலின் மொத்த எடையில் சுமார் 5 முதல் 10 சதவீதத்துக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் இந்த நிலை ஏற்படலாம்.

கொழுப்பு கல்லீரலுக்கு என்ன காரணம்?

ADVERTISEMENT

மது அருந்தாதவர்களுக்கும் கொழுப்பு கல்லீரல் ஏற்படலாம். உடல் பருமன், தொப்பைப் பகுதி அதிகரிப்பு, டைப் 2 சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. அதேபோல், அதிகப்படியான மது அருந்துதல், துரித உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கலாம்.

எந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும்?

ADVERTISEMENT

ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். நோய் தீவிரமடையும்போது காரணமில்லாத சோர்வு, உடல் பலவீனம், மேல் வயிற்றின் வலது பகுதியில் வலி அல்லது பாரம் போன்ற உணர்வு ஏற்படலாம். பசியின்மை, செரிமானக் கோளாறு மற்றும் உடல் எடை குறைதலும் சிலருக்கு தென்படலாம்.

நிலை மோசமடைந்தால் கண்கள், சருமம் மஞ்சள் நிறமாவது, வயிறு மற்றும் கால்களில் வீக்கம், உடல் முழுவதும் கடுமையான அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

கல்லீரலை பாதுகாக்க என்ன செய்யலாம்?

கொழுப்பு கல்லீரலுக்கு வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. உடல் எடையை படிப்படியாகக் குறைப்பது, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்ப்பது உதவியாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைப்பதும் அவசியம்.

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் இருந்தால் அவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

கொழுப்பு கல்லீரல் இருப்பதை ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம் மருத்துவர் மதிப்பிடலாம். கவனிக்காமல் விட்டால் சிரோசிஸ் உள்ளிட்ட தீவிர கல்லீரல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால், சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்ல.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share