கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாக பரவும் செய்திகளில் உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. Fact Check on COVID-19 Remedies
சமூக வலைதளங்களில், மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்துவிட்டது; ஒரு ஸ்பூன் மிளகு பொடி, இரண்டு ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து வெறும் வயிற்றில் 8 நாட்கள் சாப்பிட்டால் கொரோனா 100% குறையும் என்கிற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த தகவல் உண்மை அல்ல என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்க்கம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் 2018-ம் ஆண்டுக்கு முன்னர் பதிவிடப்பட்ட ஒரு சமையல் குறிப்பைத்தான் கொரோனா மருந்து என பரப்பி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Claim
கொரோனாவை குணப்படுத்தும் நாட்டு மருந்துக்கு அரசு அங்கீகாரம்
Fact
எந்த ஒரு அரசும் அப்படியான நாட்டு மருந்தை, கொரோனாவை குணப்படுத்தும் என அங்கீகரிக்கவில்லை
Result
Fake
