விரைவில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (ஜூலை 5) கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையாக 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்று எல்லோரும் கேட்கிறார்கள்.
தற்போது 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழக்கம் போல் வழங்கப்பட்டு வருகிறது. 2500 ரூபாய் வழங்குவதற்கான வழிமுறைகளை வகுப்பது உள்ளிட்ட பணிகளை ஒவ்வொன்றாக செய்து வருகிறோம். இதுவொரு நீண்ட நடைமுறை.
கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால் நிச்சயம் 2500 ரூபாய் பணம் உங்களுக்கு வழங்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
தற்போது மகளிர் உதவி தொகை பதிவு செய்தவர்கள் பணம் வரவில்லை என்று நிறைய பேர் என்னிடம் மனு கொடுக்கிறார்கள்.
அதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். மகளிர் உரிமைத் தொகை கோரி ஒரே பெயரில் இரண்டு முதல் மூன்று முறை விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு முதல்வர் கூறியது போல 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
