முகம் பளபளப்பாக ஜொலிக்க வீட்டிலேயே எப்படி பேஸ் பேக் தயாரிக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
நமது முகம் எப்போதும் பளப்பாகவும், இளமையாகவும் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், சரும பராமரிப்புக்கு நம்மால் அதிக நேரம் ஒதுக்க முடியாது. அத்துடன், முக அழகைக் கூட்ட விலை உயர்ந்த க்ரீம்கள், பேஷ் வாஷ்கள் பயன்படுத்தினாலும் அதிலும் சருமத்திற்கு பாதகங்களை விளைவிக்கும் பண்புகள் உள்ளன. இதனால் சரும அழகுக்கு இயற்கையான பொருட்களை தேட வேண்டிய சூழல் உள்ளது. தற்போது கோடைக் காலம் என்பதால் வெயில் அதிகம் காரணமாக முக சருமம் வெளியில் சென்றாலோ பாதிக்கப்படும்.
வீட்டிலேயே தயாரிக்கப்படும் பேஸ் பேக் (Face pack):
நாங்கள் உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் பேக் (Homemade besan face pack) மூலம் முக அழகை எப்படி கூட்டுவது என்று சொல்லித் தருகிறோம். இது சருமத்தை ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், இறந்த சருமத்தையும் நீக்கி, முகத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது. இது பெரும்பாலானோரின் சருமத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இயற்கையான ஃபேஸ் பேக்கிற்கு ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு முதல் மூன்று சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் (Face pack ingredients) ஆகியவை தேவை. இந்த பொருட்கள் அனைத்தும் சருமத்தை சுத்தப்படுத்தவும், ஊட்டமளிக்கவும், பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.
பேஸ் பேக் தயாரிப்பது எப்படி?:
முதலில் கிண்ணத்தை எடுத்து அதில் கடலை மாவு, தயிர் மற்றும் தேன் சேர்க்க வேண்டும். பின்னர், எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் சேர்க்க வேண்டும். இந்த அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்குங்கள். பின்னர், உங்கள் முகத்தை ஃபேஸ் வாஷ் மூலம் சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். நாம் தயாரித்த ஃபேஸ் பேக்கை (Face pack recipe) உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி 15 முதல் 20 நிமிடங்கள் உலர விடவும். உலர்ந்ததும், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
பேஸ் பேக் நன்மைகள்:
இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள கடலை மாவு சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. தயிர் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்குகிறது. தேன் சருமத்தை ஊட்டமளித்து இயற்கையான பளபளப்பைக் கொண்டுவருகிறது. மஞ்சள் சருமத்தை சுத்தப்படுத்தி (Cleanse skin) பிரகாசமாக்க உதவுகிறது. எலுமிச்சை சருமக் கறைகளைப் போக்க உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் சுத்தமாகவும், பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
