கழுத்தெலும்பு தேய்மானம் வர முக்கிய காரணம் என்ன, அது வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.
தற்போதைய நவீன காலத்தில் நீண்ட நேரம் செல்போன் மற்றும் லேப்டாப் பார்க்க குனிந்திருப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் இப்படியே இருப்பது நமது கழுத்தையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது. பலர் இதை ஒரு சிறிய விஷயமாகக் கருதி புறக்கணித்து விடுகிறார்கள். அதே சமயம் இது எப்போதும் சாதாரண வலியாக இருப்பதில்லை; பல சமயங்களில் இது கழுத்து எலும்புத் தேய்மானத்தின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
கழுத்தெலும்பு தேய்மானம் வர என்ன காரணம்?
நீண்ட நேரம் தவறான நிலையில் அமர்ந்திருப்பது, தொடர்ந்து திரையை உற்றுப் பார்ப்பது, கழுத்தை வளைத்துக்கொண்டு கைபேசியைப் பயன்படுத்துவது, வயதாவதால் எலும்புகள் பலவீனமடைவது ஆகியவை கழுத்தெலும்பு தேய்மானம் (cervical spondylosis cause) வர முக்கிய காரணமாகும். இவை அனைத்தும் படிப்படியாக கழுத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்து, பிரச்சனையைத் தீவிரமாக்கக்கூடும்.
கழுத்தெலும்பு தேய்மானம் பொதுவான அறிகுறிகள்
கழுத்தில் தொடர்ச்சியான வலி மற்றும் விறைப்பு, தலைவலி ஆகியவை ஏற்படலாம். வலியானது தோள்பட்டை (symptoms of cervical spondylosis) மற்றும் கைகளுக்குப் பரவுகிறது. மேலும் கைகளில் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
கழுத்தெலும்பு தேய்மானத்தை தடுப்பது எப்படி?
கழுத்தெலும்பு தேய்மானத்தை தவிர்ப்பதற்கான மிக எளிதான வழி சரியாக உட்காரும், வேலை செய்யும் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதுதான். செல்போன், லேப்டாப் திரையைக் கண் மட்டத்தில் (how to prevent cervical issues) வைத்து பயன்படுத்த வேண்டும். அமரும்போது உங்கள் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும்.
உங்கள் கழுத்தை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்திருக்கக் கூடாது. அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதும் சுறுசுறுப்பாக இருப்பதும் அவசியமானவை. தசை வலுவூட்டும் பயிற்சிகளும் வலியையும் விறைப்பையும் கணிசமாகக் குறைக்கும். வழக்கமான உடல் இயக்க செயல்பாடு (Exercise and staying active) முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். சரியான தலையணை மற்றும் மெத்தையை பயன்படுத்த வேண்டும். உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கழுத்தை திடீரென அசைப்பதைத் தவிர்க்க வேண்டும்
மருத்துவரை எப்போது அணுகுவது?
கழுத்து வலி தொடர்ந்து அதிகரித்தால், கைகளில் பலவீனம் (weakness or numbness) அல்லது மரத்துப்போதல் ஏற்பட்டால் அல்லது வீட்டு வைத்தியங்கள் கூட நிவாரணம் அளிக்கவில்லை என்றால், மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.









