தமிழகத்தைக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என வைரல் வீடியோ ஒன்றை சுட்டிக்காட்டி பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தமது எக்ஸ் பக்கத்தில், “ விஜய் அவர்கள் தன்னுடைய சொந்த சொத்துக்களை விற்று தமிழ் நாட்டு மக்களுக்கு, அதுவும் குறிப்பாக மகளிருக்கு, அரசு உதவிகள் செய்து வருவதாக பெண் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றை இன்று பார்த்தேன். “தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என்பது நிஜம் தான்!” என குறிப்பிட்டுள்ளார்.
ஆசீர்வாதம் ஆச்சாரி குறிப்பிடும் அந்த பேட்டியில், “முதல்வர் விஜய் தமது சொத்துகளை விற்றுதான் பெண்களுக்கு மாதம் ரூ1,000 கொடுக்கிறார்; குடும்ப தலைவிகளுக்கு 3 சிலிண்டர் இலவசமாக தருகிறார். மற்ற கட்சிகளின் ஆட்சியில் அப்படி எல்லாம் யாரும் செய்யவில்லை. முதல்வர் விஜய் அரசு பணத்தை பயன்படுத்தாமல் தாம் சம்பாதித்ததை, தமது சொத்துகளை விற்று மக்களுக்காக செலவு செய்கிறார்” என பெண் ஒருவர் கூறியிருந்தார். இந்த வைரல் வீடியோதான் இப்போது சர்சையாகி இருக்கிறது.
