தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிரடியான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. Enforcement directorate target deputy cm udhayanidhi
ஏற்கனவே டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது.
இந்தநிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். தற்போது விசாகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, சென்னையில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் நண்பரான ரதீஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. ரதீஷின் அண்ணன், அண்ணி இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகள்.
மேலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறவினர்களான தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், வாலடி கார்த்தி ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. Enforcement directorate target deputy cm udhayanidhi
