செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Monisha

encouragement marks for nurses

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,250 கிராம சுகாதார செவிலியர், துணை செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்காக https://www.mrb.tn.gov.in என்ற இணையத்தில் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராம சுகாதார செவிலியர், துணை செவிலியர் நியமனங்களில் அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள், ‘கொரோனா கேர்’ மையங்களில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி கொரோனா காலத்தில் 6 முதல் 12 மாதங்கள் பணியாற்றி இருந்தால் 2 மதிப்பெண்கள், 12 முதல் 18 மாதங்களுக்கு 3 மதிப்பெண்கள், 18 முதல் 24 மாதங்களுக்கு 4 மதிப்பெண்கள், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் 5 மதிப்பெண்கள் கூடுதலாக ஊக்க மதிப்பெண்களாக வழங்கப்படும்.

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும், பணி நிரந்தரம் வேண்டும் என்று ஒரு புறம் செவிலியர்கள் போராடி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணை செவிலியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

பிக் பாஸ் வீட்டில் துவங்கிய காதல் எபிசோட்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழ்நாட்டின் கோரிக்கைகள் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share