நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 6) சென்னை வருகிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேதல் ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறை, காவல், வருமான வரித்துறை, புலனாய்வு, சுங்கத்துறை அதிகாரிகளுடன் மதியம் 2.30 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னேற்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!
ஹெல்த் டிப்ஸ்: கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் பணிபுரிபவர்களா நீங்கள்?