ADVERTISEMENT

SIR படிவங்கள்.. டிசம்பர் 11 வரை காலக்கெடு நீட்டிப்பு: தேர்தல் ஆணையம்

Published On:

| By Mathi

SIR Deadline

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்காக (SIR) பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க டிசம்பர் 11-ந் தேதி வரை காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்போது வாக்காளர்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் வாக்குச் சாவடி அலுவலர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

வாக்காளர்கள் தாங்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க டிசம்பர் 4-ந் தேதி கடைசி நாள் என்றும் டிசம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 11-ந் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ந் தேதி வெளியிடப்படும்; வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை ஜனவரி 15-ந் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share