டிவி பார்க்கிறது இல்லை. வெளியே வருவது இல்லை.. என்ன நடக்குதுன்னே எதுவுமே தெரியாத விஜய்… எடப்பாடி பழனிசாமி காட்டம்!

Published On:

| By Mathi

EPS Vijay

தவெக தலைவர் விஜய்க்கு நாட்டில் என்ன நடக்கிறது? என்பது எதுவுமே தெரியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் இன்று பிப்ரவரி 4-ந் தேதி செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: விஜய் பொதுவெளியில வந்து பார்த்தாத்தானே தெரியும்? பொதுவெளியிலேயே வரல. ஒரு சம்பவம் நடந்து போச்சு.. (கரூரில் 41 பேர் பலியான துயரம்) அந்தச் சம்பவத்தை ஒட்டி 72 நாட்கள் ஒரு கட்சித் தலைவரே (விஜய்) வெளிய வரல.

ADVERTISEMENT

நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியல. எந்தெந்தக் கட்சி எந்தெந்தக் கட்சியோட கூட்டணியில இருக்குதுன்னு தெரியல.. எந்தக் கட்சி, தேர்தல் கூட்டணிக்கு தலைமை தாங்கும்னு தெரியல.. இவரை வெச்சு நான் என்ன செய்யறது?

அவருக்கு ஒண்ணுமே தெரியாத போது எங்களக் கேள்வி கேட்டா அவர்கிட்ட போய் கேள்வி கேளுங்க.

ADVERTISEMENT

ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்கின்ற பொழுது ஐடிசி சோழா ஹோட்டலில் தெளிவுபடுத்தியாச்சு….

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நானும் எங்க மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு முதல் பேட்டியிலே சொன்னோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டும் இணைந்து புதிய கூட்டணி அமைச்சிருக்குது. இந்தக் கூட்டணிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை தாங்கும். இந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா திமுக ஆட்சி அமைக்கும். எங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என தெளிவுபடுத்தியாச்சு.

ADVERTISEMENT

இதை அவரு டிவில பாக்கல, பாக்குறதுக்கு நேரமில்ல. மக்களைப் பார்க்கிறதுமில்ல, தொலைக்காட்சியில பார்த்து தெரிஞ்சுக்கல. ஒண்ணுமே தெரியாதவரை வெச்சுகிட்டு என்கிட்ட கேள்வி கேட்கக்கூடாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share