பேச்சுலர்களுக்கு சூப்பர் ஈஸி! 10 நிமிடத்தில் 5 வகை சுவையான சமையல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தனியாகத் தங்கி வேலை அல்லது படிப்பைத் தொடரும் பலருக்கும் தினமும் சமைப்பது பெரிய வேலையாகவே தெரியும். சமையலறையில் அதிக நேரம் செலவிடாமல், கையில் இருக்கும் பொருட்களை வைத்துச் சீக்கிரமாக ஏதாவது சமைத்துச் சாப்பிட வேண்டும் என்றால் சில எளிய ரெசிபிகள் கைகொடுக்கும். அப்படிப்பட்ட ஐந்து உணவு வகைகளைப் பற்றிய தகவல்களைக் ‘கல்கி ஆன்லைன்’ வெளியிட்டுள்ளது.

தயிர் அவல் சாலட்

அவல், தயிர், துருவிய கேரட், வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கலக்க வேண்டும். கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்தால் சிம்பிளான தயிர் அவல் சாலட் தயார்.

ADVERTISEMENT

பிரெட் உப்புமா முதல் மீல் மேக்கர் ஃப்ரை வரை

பிரெட் துண்டுகளைச் சிறிது டோஸ்ட் செய்து, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாக்களுடன் சேர்த்து வதக்கினால் பிரெட் உப்புமா ரெடி. சாண்ட்விச்சுக்கு மாற்றாக இதை முயற்சி செய்யலாம்.

மீல் மேக்கரைச் சுடுநீரில் ஊறவைத்து, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூளுடன் வதக்கினால் சுவையான மீல் மேக்கர் ஃப்ரை கிடைக்கும்.

ADVERTISEMENT

குக்கரில் தக்காளி புலாவ்

ஊறவைத்த அரிசி, தக்காளி, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பட்டை, சோம்பு உள்ளிட்ட பொருட்களுடன் குக்கரில் எளிதாகத் தக்காளி புலாவ் செய்யலாம். இரண்டு விசில் விட்டால் போதும் என்பதால் அவசர நேரத்திற்கு ஏற்ற உணவாக இது இருக்கும்.

மீதமான சப்பாத்திக்கு ரோட்டி பீட்சா

மீதமான சப்பாத்தியை வீணாக்காமல் பீட்சாவாக மாற்றலாம். சப்பாத்தியின் மீது சாஸ் தடவி, வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், சீஸ் ஆகியவற்றைத் தூவி மூடி வைத்தால் சீஸ் உருகியதும் சுவையான ரோட்டி பீட்சா தயார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share