சப்பாத்தி பஞ்சு போல மென்மையாக இருக்க வேண்டுமா? இந்த 5 டிப்ஸ் போதும்!

Published On:

| By Minnambalam Desk

சப்பாத்தி சுட்ட உடனே மென்மையாக இருந்தாலும், சிறிது நேரத்தில் அப்பளம் போல காய்ந்து போவது பல வீடுகளில் நடக்கும் விஷயம்.

மாவு பிசைவது முதல் சுட்ட சப்பாத்தியை எப்படிப் பாதுகாப்பது வரை சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கலாம். 

ADVERTISEMENT

மாவு பிசையும்போதே தொடங்கும் ரகசியம்

சப்பாத்தி மாவைப் பிசையும்போது மிதமான வெந்நீரைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். மாவு காயாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் தடவி, பிசைந்த மாவை குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், தண்ணீருக்குப் பதிலாகக் காய்ச்சிய பாலைப் பயன்படுத்தி மாவு பிசைவதும் சப்பாத்திக்கு கூடுதல் மென்மையையும் சுவையையும் தரும். 

சப்பாத்தியை எவ்வளவு மெல்லியதாக தேய்க்க வேண்டும்?

ADVERTISEMENT

சப்பாத்தியை மிகவும் மெல்லியதாகத் தேய்ப்பது மென்மைக்கு உதவும் என்றில்லை. சரியான தடிமனில் தேய்த்து, தவாவை மிதமான சூட்டில் வைத்துச் சுட வேண்டும். அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் சுட்டால் சப்பாத்தி விரைவாக காய்ந்து கடினமாகிவிடும்.

சுட்ட பிறகு இப்படிப் பாதுகாத்தால் போதும்!

சப்பாத்தி சுட்டவுடன் திறந்தவெளியில் வைத்துவிடாமல் சுத்தமான பருத்தித் துணியில் சுற்றி வைக்கலாம். பின்னர் அவற்றை ஹாட்பாக்ஸில் மூடி வைப்பது மென்மையைத் தக்கவைக்க உதவும்.

ஹாட்பாக்ஸின் அடியில் ஒரு டிஷ்யூ பேப்பர் வைப்பதும் கூடுதல் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த உதவும். 

கடைசியில் கொஞ்சம் நெய்!

சூடாக இருக்கும் சப்பாத்தியின் மீது லேசாக நெய் தடவினால் மணமும் சுவையும் கூடுவதுடன், சப்பாத்தி மென்மையாக இருக்கவும் உதவும். இந்தச் சிறிய விஷயங்களைச் சரியாகப் பின்பற்றினால், மதிய உணவுக்காக முன்கூட்டியே தயாரித்த சப்பாத்திகளும் சாஃப்டாகவே இருக்கும். 

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share