கோதுமை ரவையில் 5 விதமான ரெசிபிகள்: சுவையும் ஆரோக்கியமும் ஒரே தட்டில்!

Published On:

| By Minnambalam Desk

காலை உணவுக்கு கோதுமை ரவை உருண்டை

தினமும் ஒரே மாதிரியான இட்லி, தோசை என்று சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை ரவையை வைத்து விதவிதமான உணவுகளைச் செய்யலாம். எளிதில் கிடைக்கும் காய்கறிகளுடன் கோதுமை ரவையை சேர்த்து செய்யும் உணவுகள் சுவையுடன் இருப்பதோடு, மெனுவிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். 

ADVERTISEMENT

கேரட், பீன்ஸ், பட்டாணி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை கோதுமை ரவையுடன் கலந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து பரிமாறலாம். தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் இது நல்ல காலை உணவாக அமையும்.

சுவையான கோதுமை ரவை அடை

ADVERTISEMENT

ஜவ்வரிசி, கோதுமை ரவை, அரிசி மாவு, கேரட், வெங்காயம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து அடை மாவு தயாரிக்கலாம்.

மாவை சிறிது நேரம் ஊறவைத்த பிறகு தோசைக்கல்லில் மெல்லியதாகத் தட்டி, சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் வெளிப்புறம் சற்று மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும். 

ADVERTISEMENT

மொறு மொறு வடை முதல் இனிப்பு ஜாங்கிரி வரை

கோதுமை ரவையுடன் உருளைக்கிழங்கு, கேரட், கோஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து வடை செய்யலாம். புதினா சட்னியுடன் பரிமாறினால் சுவை கூடும்.

இதே ரவையை வைத்து ஜாங்கிரியும் செய்யலாம். கோதுமை ரவை, அரிசி மாவு, கடலை மாவு, பால் ஆகியவற்றை சேர்த்து மாவு தயாரித்து, சர்க்கரைப் பாகில் ஊறவைத்தால் இனிப்பான ஜாங்கிரி தயார். 

மதிய உணவுக்கு கோதுமை ரவை பிரியாணி

கோதுமை ரவையை வைத்து காய்கறி பிரியாணியும் தயாரிக்கலாம். காளான், பட்டாணி, கேரட், பீன்ஸ் ஆகியவற்றுடன் புதினா, கொத்தமல்லி மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து சமைக்கப்படுகிறது.

குக்கரில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணிக்கு வழக்கமான அரிசிக்கு பதிலாக கோதுமை ரவை பயன்படுத்தப்படுகிறது. ஒரே ரவையை வைத்து காலை உணவு, சிற்றுண்டி, இனிப்பு, மதிய உணவு என பல வகைகளை முயற்சி செய்ய முடியும். 


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share