பரந்துர் விமான நிலையம் திட்டம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். விமான நிலைய விவகாரம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் எனத் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாகப் பேச வாய்ப்பு மறுத்தார்.
110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அது குறித்துப் பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் எழுந்து கோஷமிட்டனர். ‘உடனடியாக அனைவரும் வெளியே சென்று கோஷம் எழுப்புங்கள்’ என்று சபாநாயகர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுகவினர் உடனடியாகச் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியில் செல்லும்போது, ‘அனுமதி கொடு! அனுமதி கொடு!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.”
