புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு!

Published On:

| By Mathi

DMK Candidate for Thattanchavady

DMK Candidate for Thattanchavady: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்ற சேது செல்வம் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மங்களம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து முதல்வரான ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறுகிறது; அன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்ற சேது செல்வம் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 9) அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share