VIDEO: ராகுல் காந்தி பேரணியில் ‘சிக்கி’ நிலைகுலைந்த கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார்- பகீர் வீடியோ!

Published On:

| By Mathi

DK Shivakumar-Congress-Rahul

டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்ற பேரணியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைகுலைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் டெல்லியில் உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்தப் பேரணியின்போது ராகுல் காந்தியைச் சுற்றி ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது ராகுல் காந்திக்கு சற்று முன்னால் டி.கே.சிவகுமார் நடந்து சென்று கொண்டிருந்தார்.

ராகுல் காந்தியை கூட்டத்தினர் நெருங்கிவிடாத வகையில் அவர்களை டி.கே.சிவகுமார் விலக்கிக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென தொண்டர்கள் கூட்டமாக ராகுல் காந்தியை நோக்கி முன்னேறியதால், டி.கே.சிவகுமார் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

ADVERTISEMENT

அடுத்தடுத்து வந்த தொண்டர்களும் நெருக்கியதால், ஒரு கட்டத்தில் டி.கே.சிவகுமார் கூட்டத்தின் நடுவில் சிக்கி நிலைகுலைந்து போனார்.

இந்தப் பரபரப்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share