திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக நேற்று ஜூன் 27-ந் தேதி காலமானார்.

பாக்யராஜ் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கொட்டும் மழையிலும் நேற்று இரவு திரை உலகத்தினர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாக்யராஜின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.


திரைத்துறைக்கு பாக்யராஜ் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
அவரது உடல் இன்று ஜூன் 28-ந் தேதி காலை நுங்கம்பாக்கம் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு வள்ளுவர் கோட்டம், கிரீன்வேஸ் சாலை, அடையாறு வழியாக பெசன்ட் நகர் சென்று கொண்டிருக்கிறது.
பாக்யராஜ் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை அளிக்கப்படும். அதன் பின்னர் கே.பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்படும்.
