டிஜிட்டல் திண்ணை: ஏப்ரல் 13,14-ல் தேர்தல்; 46 சீட்.. துணை முதல்வர் பதவி.. அலறும் அதிமுக- அதிர்ச்சியில் அண்ணாமலை

Published On:

| By Mathi

DT AIADMK BJP

வைஃபை ஆன் செய்ததும், ”விடாது கறுப்பு”ன்னு சும்மாவா சொல்றாங்க என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. கறுப்பு சிவப்புன்னு டயலாக்?

ADVERTISEMENT

அய்யா.. நாம பேசப் போறது காவி கட்சியை பத்தி.. டெல்லியில் இருந்து பிஎல் சந்தோஷ் வந்திருக்காக இல்லீயா.. சூடா மேட்டர் சொல்றேன்.. கேட்டுக்கோங்க

ஓஹோ.. ஆரம்பமே அமர்க்களம் போல.. சொல்லுமய்யா..

ADVERTISEMENT

ஆமாய்யா.. கமலாலயத்துல இன்னைக்கு தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம், சட்டப்பேரவை தேர்தலை எப்படி சந்திக்கிறதுன்னு ஆலோசனைக் கூட்டம்னு ஒரே பரபரப்பா இருந்தாங்க..

இதுல பாஜக தேசிய பொதுச்செயலாளரான பிஎல் சந்தோஷ், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்துகிட்டாங்க.. காலையில 11 மணிக்கு ஆரம்பிச்ச கூட்டம் பகல் 1.30 மணி வரைக்கும் ரன்னிங் ரேஸ் மாதிரி அடுத்தடுத்து நடந்துச்சு..

ADVERTISEMENT

முதல்ல தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம் நடத்துனாங்க.. அப்புறமா ஒரு சின்ன கேப்புல, சீனியர்களான பொன்னார், எல்.முருகன் உள்ளிட்டவங்களோட பிஎல் சந்தோஷ் தனியா ஒரு டிஸ்கஷன் நடத்தினாரு..

இதுக்குப் பிறகு மெயின் அஜெண்டாவான சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் எப்படி இருக்கனும்னு ஆலோசனை கூட்டம் நடந்துச்சு..

என்ன சொன்னாராம் பிஎல் சந்தோஷ்?

தேர்தல் ஆலோசனை கூட்டத்துல பிஎல் சந்தோஷ் பேசுனதுதான் பத்திகிட்டு எரியுதுய்யா..

பிஎல் சந்தோஷ் பேசுனதுல முக்கியமான விஷயம் என்னான்னா, “இன்னைக்கு ஹிந்து பேப்பர்ல அதிமுக தலைமையிலதான் ஆட்சி அமையும்னு எடப்பாடி பேசியிருக்கிறதா வந்துருக்கு..

ஆனா தமிழ்நாட்டுல NDA ஆட்சிதான்னு பிஎம் மோடிஜி ரொம்ப உறுதியா இருக்கிறாரு..

ஏன் நாம எல்லாம் துணை முதல்வர் ஆக கூடாதுன்னு எதுவும் இருக்குதா? நம்ம 2 பேரோ 5 பேரோ 8 பேரோ அமைச்சராகக் கூடாதுன்னு இருக்குதா?”ன்னு சீரியசா பேசியிருக்காரு.

அடுத்ததாக இன்னொரு முக்கியமான விஷயத்தையும் போட்டுடைச்சுட்டாரு பிஎல் சந்தோஷ்.. அதாவது, “ இங்க ஏப்ரல் 13,14-ல் தேர்தல் நடக்கப் போகுது.. சரியா சொல்லனும்னா 60 நாட்கள்தான் இருக்கு.. ஸோ 60X24.. மணிநேரம்தான் கையில இருக்கு.. இதை கணக்குப் போட்டு எலக்‌ஷன் வேலையை வேகமா பாருங்க”ன்னு சொல்லி இருக்காரு..

அடுத்ததா சீட் ஷேரிங்கை பத்தியும் பிஎல் சந்தோஷ் சொல்லி இருக்காரு.. “நமக்கு 20% சீட் கிடைக்கும்.. (46 தொகுதிகள்).. இதுல எல்லா இடத்துலயும் ஜெயிக்கிற மாதிரி கவனமா வேலை செய்யனும்”னு சொன்னாரு..

ஓஹோ.. சலசலப்பு எல்லாம் எதுவும் இல்லையா?

உமக்கு குசும்புய்யா.. இந்த ஆலோசனைக் கூட்டத்துல பேசுன ஒருத்தரு, ”அண்ணாமலைக்கு எந்த போஸ்ட்டும் கொடுக்காம இருக்கீங்களே.. எலக்‌ஷன் நேரம்.. அவருக்கும் முக்கியத்துவம் தந்தா நல்ல இருக்கும்”னு குரல் கொடுத்தாரு.. ஆனால் அண்ணாமலையின் காட் பாதராக சொல்லப்படும் பிஎல் சந்தோஷ், “இங்க don’t projection individual- இங்க தனிநபரை முன்னிறுத்தாதீங்க. தேர்தல் வேலைகளைப் பாருங்க.”ன்னு முகத்தில் அடிச்சமாதிரி பதில் சொன்னதை சில சீனியர்ஸ் கமுக்கமாக ரசிக்கவும் செஞ்சாங்கய்யா..

அதே மாதிரி விஜய்யை பத்தியும் ஒருசிலர் பேசுனாங்க.. ஆனா பிஎல் சந்தோஷ், “ஏங்க எலக்‌ஷனப்ப கடைசி 60 நாட்களில்ல தொகுதி வேட்பாளர் யாருன்னுதான் பொதுமக்கள் மைண்ட் செட் இருக்கும்.. உங்க தொகுதியில விஜய் கட்சியோட வேட்பாளர் யாருன்னு சொல்லிட முடியுமா? சொல்ல முடியாதுல்ல.. அதனால நம்ம வேலையை நாம பார்ப்போம்”என கறாராக பேசியதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share