IPL 2025 : கேப்டனாக களமிறங்கும் தோனி… சிங்கப்பாதைக்கு திரும்புமா சென்னை?

Published On:

| By christopher

dhoni return as captain can turn csk in win path

அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இன்று (ஏப்ரல் 5) மதியம் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். dhoni return as captain can turn csk in win path

தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வென்றது ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணி. அதன்பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்து தடுமாறி வருகிறது. புள்ளிப்பட்டியலிலும் -0.771 ரன்ரேட்டுடன் 8வது இடத்தில் பின் தங்கியுள்ளது.

இதற்கிடையே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட முழங்கை காயம் காரணமாக அவர்களின் கேப்டன் ருத்துராஜ் இன்று களம் காண்பாரா என்பது கேள்விகுறியாக மாறியுள்ளது.

அதனால் இன்றைய போட்டியில் தோனியே கேப்டனாக செயல்படுவார் எனக் கருதப்படுகிறது. இதனை நேற்று பத்திரிகையாளர் சந்திப்பிலும் அந்த அணியின் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி சூசகமாக தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அதே வேளையில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் ஃபார்மில் உள்ளது.

இதுவரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 30 முறை சந்தித்துள்ள நிலையில், அதில் 19-11 என்ற கணக்கில் சென்னை ஆதிக்கம் செலுத்துகிறது. அதே போன்று சேப்பாக்கத்தில் நடந்த 9 ஆட்டங்களில் 7 முறை சென்னை அணியே வென்றுள்ளது. கடைசியாக நடந்த ஐந்து போட்டிகளில் சென்னை அணி நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணியில் தமிழக வீரரான ஆண்ட்ரே சித்தார்த் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு தொடரில் இதுவரை களமிறங்காத ’சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடராஜன் டெல்லி அணியின் பிளேயிங் 11ல் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share