தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக முன்னிலை

Published On:

| By Pandeeswari Gurusamy

Dharapuram-Vijay

தமிழகத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்பட 22 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

இந்தத் தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவிய நிலையில், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை 8:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் 7 சுற்று வாக்கு எண்ணிக்கையில் தவெக 917 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

தவெக18, 690 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

அதிமுக 17,773 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

திமுக 15,988 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சி 1,364 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 363 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அந்த வகையில் 917வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகித்தார்.

8 ஆவது சுற்று நிலவரம்

தவெக – 21,034

அதிமுக – 19,730

திமுக – 17,898

நாதக – 1,632

சிபிஐ – 402

தற்போதைய நிலவரப்படி சத்தியபாமா 1304 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share