புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு… விஜய், புஸ்ஸி ஆனந்துக்கு என்ன இலாகா?

Published On:

| By Kavi

தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த இலாகா என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே 11ஆம் தேதி தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் பொறுப்பேற்ற 7 ஆவது நாளான இன்று அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்

ADVERTISEMENT

விஜய்முதலமைச்சர்

பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை (Home), சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்.

ADVERTISEMENT

அமைச்சர் என்.ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டம், ஊரகக் கடன்தீர்ப்பு மற்றும் பாசனம், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு

அமைச்சர் அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.

அமைச்சர் செங்கோட்டையன் – நிதித்துறை

நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப்படிகள்

அமைச்சர் வெங்கடரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை

உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு

அமைச்சர் நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை

மின்சாரம் மற்றும் மரபுசாரா ஆற்றல் மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்

அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் செய்தித்துறை

பள்ளிக்கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம் (செய்தி மற்றும் மக்கள் தொடர்பு), திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராஃப் சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்.

அமைச்சர் டி.கே.பிரபு – கனிம வளத்துறை

தாதுக்கள் மற்றும் சுரங்கம்

அமைச்சர் கீர்த்தனா – தொழில் துறை

தொழில்கள், முதலீடு ஊக்குவிப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share