ஹெல்த் டிப்ஸ்: ஜாக்கிங்கைவிட சைக்கிளிங் நல்லதா… ஏன், எப்படி?

Published On:

| By christopher

Cycling vs Jogging Which Is Better?

“உடல் பருமன் பிரச்சினை இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பவர்களுக்கும்கூட ஜாகிங்கைவிட சைக்கிளிங் மிக நல்லதோர் உடற்பயிற்சி” என்கிறார்கள் ஃபிட்னஸ் டிரெய்னர்ஸ். தொடர்ந்து, “சைக்கிளிங்கை எப்படி செய்ய வேண்டும், யாரெல்லாம் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்வது பெஸ்ட் உள்ளிட்ட தகவல்களையும் சொல்கிறார்கள்.

“உடலில் இருக்கிற தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் சைக்கிளிங் பெஸ்ட் உடற்பயிற்சி. சைக்கிளிங் செய்யும்போது நுரையீரல் ஆக்ஸிஜனை அதிகமாக எடுக்கும். அதனால் இதயத்தின் ஆரோக்கியமும் நுரையீரலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கூடவே உடலின் செல்களுக்கும் ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சைக்கிளிங் செய்பவர்களின் நுரையீரலை அவ்வளவு சுலபமாக தொற்றுநோய் கிருமிகள் தொட்டுவிட முடியாது.

ADVERTISEMENT

அதிகாலை நேரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும் என்பதால் இதுதான் சைக்கிளிங் செய்வதற்கு மிகச் சரியான நேரம். காலை, மாலை என எப்போது வேண்டுமானாலும் சைக்கிளிங் செய்யலாம். செய்யக்கூடாத நேரம் என்று எதுவும் கிடையாது. உங்களுடைய செளகரியம்தான். ஆனால், சைக்கிளிங் செய்கிற நேரத்தில் பாதி வயிறாவது காலியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்துதான் சைக்கிளிங் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடனே சைக்கிளிங் செய்தீர்களென்றால், உடலின் ரத்த ஓட்டமானது கால்களுக்கும் குறிப்பாக தொடைகளுக்கும் அதிகமாக பாய ஆரம்பித்துவிடும். இதனால் உணவு செரிமானத்தில் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

ADVERTISEMENT

அதிகப்படியான உடல் பருமன் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் ஜஸ்ட் அரை மணி நேரம் மட்டும் சைக்கிளிங் செய்தீர்களென்றால் உங்களுக்கு பலன் கிடைக்காது. ஏனென்றால் முதல் 20 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வதற்கான எனர்ஜிக்கு, உடல் தன்னிடம் இருக்கிற அதிகப்படியான சர்க்கரைச் சத்தை எடுக்கும். அதன் பிறகும் தொடர்ந்து நீங்கள் சைக்கிளிங் செய்யும்போதுதான், உடலானது கொழுப்பைக் கரைத்து தனக்கான எனர்ஜியை எடுக்க ஆரம்பிக்கும். அதனால், உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றாலோ, அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வேண்டுமென்றாலோ தினமும் ஒரு மணி நேரம் சைக்கிளிங் செய்ய வேண்டும்.

சைக்கிளிங் செல்ல வயது வரம்பு எதுவுமே கிடையாது. சைக்கிள் ஓட்டத் தெரிந்த பேரன், பேத்தியில் ஆரம்பித்தது, ஆர்வம் இருக்கிற தாத்தா, பாட்டி வரைக்கும் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் செய்யலாம்.

ADVERTISEMENT

குறிப்பாக, ஜாகிங் செய்யும்போது பாதங்கள் தரையில் தட் தட் என்று அதிரும்போது கால் முட்டுகள், இடுப்பின் இணைவுகள், கழுத்துப்பகுதியிலும் அதிர்வு ஏற்படும். இதனால் ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் வலி இருப்பவர்களுக்கு வலி இன்னும் அதிகமாகும். ஆனால், சைக்கிளிங்கில் இந்த மாதிரி அதிர்வுகள் கிடையாது. அதனால், மூட்டுவலி இருப்பவர்களும் சைக்கிளிங் செய்யலாம். மூட்டுவலி பிரச்சினைகள் இல்லாதவர்களுக்கு இனிமேல் வராமலும் தடுக்கும் சைக்கிளிங்.

இதுவரை எந்த உடற்பயிற்சியும் சைக்கிளிங்கும் செய்யாமல் இருந்தவர்கள், திடீரென்று தங்கள் 40 வயதில் இதையெல்லாம் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் ரத்த அழுத்தத்தையும், மருத்துவரிடம் பரிசோதித்துப் பார்த்து நார்மல் என்றால் மட்டுமே சைக்கிளிங் செய்ய வேண்டும். ஏனென்றால், உங்களுக்குத் தெரியாமல் சின்னதாக இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், திடீரென சைக்கிளிங் செய்யும்போது பாதிப்பு ஏற்படுத்தலாம்.

இதேபோல், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அது தெரியாமல் நீங்கள் திடீரென சைக்கிளிங் செய்ய ஆரம்பித்தால் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளும் வரலாம். வயது 40-க்கும் குறைவு என்றாலும் அதிகப்படியான உடல் எடைக்கொண்டவர்கள் புதிதாக சைக்கிளிங் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால், மருத்துவரை ஆலோசித்துவிட்டு சைக்கிளிங் செய்ய ஆரம்பியுங்கள்.

முதல் நாள் 10 நிமிடம், அடுத்த நாள் 15 நிமிடம், அதற்கடுத்த 20 நிமிடம் படிப்படியாக சைக்கிளிங் நேரத்தை அதிகரியுங்கள். இதையும், ஆரம்ப நாள்களில் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் பிரித்தும் செய்யலாம்” என்று பரிந்துரைக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணே எனக்கு ஒரு டவுட்டு! – அப்டேட் குமாரு

’அழுகைய அடக்கவே முடியல..!’ – ’அமரன்’ குறித்து நடிகர் ரஜினிகாந்த்

நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகள் : மோடிக்கு கார்கே பதிலடி!

பியூட்டி டிப்ஸ்: பொடுகுத் தொல்லையைப் போக்க… இதோ ஒரு சூப்பர் ஹேர் பேக்!

Cycling vs Jogging Which Is Better?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share