இன்னைக்கு மதியம் ஆபிஸ் கேண்டீன்ல டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன்.
தம்பி ஒருத்தர் என்கிட்ட வந்து”எல்லோரும் தீசிஸ் சப்மிட் பண்ணிட்டு தான பிஎச்.டி பட்டம் வாங்குவாங்க. ஆனா நம்ம சீமான் அண்ணன் மட்டும் பிஎச்.டி வாங்கிட்டு தீசிஸ் சப்மிட் பண்ணேன்னு பேசுறாப்ல. அது எப்படினா சாத்தியம்னு” டவுட் கேட்டாப்ள.
“டேய் அவரு தினமும் ஒரு கதை சொல்லுவாரு. அது கன்னித்தீவு தொடர்கதை மாதிரி போய்க்கிட்டே இருக்கும். அதெல்லாம் பெரிசு படுத்தாதன்னு” சொல்லி அவனோட டவுட்ட க்ளியர் பண்ணி வச்சேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
குட்டி
விஜயை திட்டி தீர்க்கும் சீமான்..
Tvk thozhargal:- அப்பாடா நாங்க கூட 2026ல கூட்டணி வச்சிடுவாரோனு பயந்துட்டோம்ங்க…
புகழ்
வயிற்றெரிச்சல் என்பது மனம் சம்பந்தப்பட்டது.. வயிறு எரிச்சல் என்பது உடல் சம்பந்தப்பட்டது.
நெல்லை அண்ணாச்சி
நான் ” குட்டி கதை ” சொல்பவன் அல்ல தம்பி..” – விஜய் மீது சீமான் தாக்கு
# அதான்…ஊருக்கே தெரியுமே..ஜி..!!
iQKUBAL
குதிரை சவாரி பண்ணா உடம்ப குறைக்கலாம்னு குதிரை வாங்கி ஓட்டுனேன்… அப்றம் தான் தெரிஞ்சுச்சு, என்னை வச்சுக்கிட்டு ஓடுனதுல குதிரைதான் 10 கிலோ குறைஞ்சுச்சுன்னு…
Sasikumar J
அரசியலும், கல்யாண வாழ்க்கையும் இரண்டும் ஒண்ணு வெளியில் இருந்து பார்க்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருக்கும் உள்ள வந்து பார்த்த பிறகு தான் அதோட கஷ்டம், நஷ்டம் எல்லாமே தெரியும்..!
செங்காந்தள்
மனைவி “ஏங்க எதாவது பேசிட்டு இருக்கலாம் வாங்கனு” கூப்பிட்டால் சண்டை போட கூப்பிடறாங்கனு அர்த்தம்…!!!
mohanram.ko
சீமான் அண்ணா- எத்தனை வருஷமா குட்டி கதை சொல்ற… நான் 15 வருஷமா கதை மட்டும் தான் சொல்றேன்
கடைநிலை ஊழியன்
என்ன படத்துக்கு போகலாம்.. ? amaran..
அதுக்கு டிக்கெட் கிடைக்கலயே..
bloody beggar..
அது தான் சரி இல்லனு சொல்றாங்களே..
brother..
உன் தொல்லையே தாங்க முடியல.. இதுல brother வேறையா..
சரி விடுங்க.. எப்பவும் போல suntv பாப்போம்..
லாக் ஆஃப்
+1
4
+1
15
+1
+1
9
+1
2
+1
6
+1
4