“முடி கொட்டுதல் மற்றும் பொடுகுத் தொல்லையைப் போக்க, சங்குப்பூ, செம்பருத்தி, பூந்திக்கொட்டை, வெந்தயப்பொடி, தயிர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சூப்பரான ஹேர் பேக்கைத் தயாரித்துப் பயன்படுத்தலாம்” என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்.
“நான்கு பூந்திக் கொட்டையை ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். காய்ந்த செம்பருத்திப் பூக்கள் மற்றும் காய்ந்த சங்குப் பூக்களைத் தனித்தனியாக ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். இவை ஒவ்வொன்றிலும் சூடான தண்ணீரை ஊற்றுங்கள்.
இப்படி பூக்களில் சூடான தண்ணீரை ஊற்றும்போதே தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுவதை உங்களால் பார்க்க முடியும். சிறிது நேரம் அப்படியே இதனை ஊறவிடுங்கள்.
மற்றுமொரு பவுலில் கொஞ்சம் வெந்தயப் பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். பூந்திக்காயை ஊறவைத்த தண்ணீரை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, வெந்தயப் பொடியுடன் சேருங்கள்.
சங்குப் புஷ்பம் ஊறிய தண்ணீர் மற்றும் செம்பருத்திப் பூக்கள் ஊறிய தண்ணீர் ஆகியவற்றையும் தலா ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து வெந்தயக் கலவையுடன் சேருங்கள். இதனுடன் கொஞ்சம் தயிர் சேர்த்துக் கலந்துவிடுங்கள்.
கொஞ்ச நேரத்திலேயே வெந்தயப் பொடியானது கலவையில் உள்ள நீர்ச்சத்து அனைத்தையும் இழுத்துக்கொண்டு நன்றாக ஊறி நிறைய வந்துவிடும். அவ்வளவுதான்… பேக் ரெடி!
பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கொஞ்சம் எடுத்துத் தலையில் அப்ளை செய்து மென்மையாக ஒரு மசாஜ் கொடுங்கள். ஓர் அரைமணி நேரம் முதல் ஒரு மணிநேரம் வரை கூந்தலை அப்படியே விடுங்கள்.
பின்னர் கலந்து வைத்துள்ள பேக்கை எடுத்து, தலைமுடியைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துப் பிரித்து ஸ்கால்ப்பில் படும்படி தலை முழுக்க அதனை அப்ளை பண்ணுங்கள்.
தலையில் உங்களுக்கு எந்த இடத்தில் அரிப்பு இருக்கிறதோ, அங்கு இதனை தவறாமல் அப்ளை பண்ணுங்கள்.
பின்னர், ஒரு 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். அதிக நேரம் உலரவிட்டால், தலைமுடியை அலசுவதற்குக் கடினமாக இருக்கும்.
பிறகு, தலைமுடியை நீரில் நன்கு அலசுங்கள். மென்மையான, பளபளப்பான கூந்தல் உங்களைப் பார்த்துச் சிரிக்கும். வாரத்தில் ஒருநாள் இந்தப் பேக்கைப் போடலாம்.
சீரான இடைவெளியில் இதனைப் பயன்படுத்திவரும்போது பொடுகுத் தொல்லை மறைந்து தலைமுடி கொட்டுவதும் நிற்கும்’’ என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு!
கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?
கோவை நகர போலீசை ரகசியமாக எச்சரித்த என்.ஐ.ஏ… பின்னணியில் கார் வெடிகுண்டு?
டாப் 10 செய்திகள்: தீபாவளி பண்டிகை முதல் அமரன் ரிலீஸ் வரை!