இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலம் !

Published On:

| By Minnambalam Login1

current affairs tamil urbanization

நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலம்:current affairs tamil urbanization

  • நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப் பேரவையில் 1971-1972 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்தபோது,
  • நகர்ப்புறங்களின் வசதி வாய்ப்புகளைக் கிராமப்புறத்து மக்கள் ஒரு கால கட்டத்திற்குள் பெற்றிட வேண்டுமென்னும் குன்றா ஆர்வத்துடன் இந்த அரசு செயல்படும் என்று குறிப்பிட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
  •  அவ்வாறு குறிப்பிட்டதற்கு ஏற்பவே குடிநீர் வசதி சாலைவசதி மின்விளக்கு வசதி போக்குவரத்து வசதி முதலிய அனைத்து வசதிகளையும் கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது
  • அதன் காரணமாக தமிழகம் மற்ற மாநிலங்களைவிட மிக வேகமாக நகரமயமாகி வந்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி: current affairs tamil urbanization

  • இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 1991-ல் 25.71 சதவீதம் என இருந்தது 2011-ல் 31.16 ஆக உயர்ந்தது.
  • அதே நேரத்தில் தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 2011ம் ஆண்டில் 48.45 சதவீதம் என உயர்ந்து இந்திய சராசரியைவிட ஏறத்தாழ 17.29 சதவீதம் அதிகரித்தது.
  • இதன் விளைவாக ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெறுகின்றன.
  • ஓர் ஊராட்சியில் 10,000 மக்கள் தொகையும் ரூ.30 லட்சம் வருமானமும் இருந்தால் அந்த ஊராட்சியைப் பேரூராட்சி ஆக்கலாம் என்றும்
  • 30,000 மக்கள் தொகையும் ரூ.50 லட்சம் வருமானமும் இருந்தால் அந்தப் பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்தலாம் என்றும்,
  • 3 லட்சம் மக்கள் தொகையும் 30 கோடி ரூபாய் வருமானமும் இருந்தால் அந்த நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தலாம் என்றும் நடைமுறையில் உள்ள விதிகளின் படி,
  • தமிழகத்தில் தற்போது 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் உள்ளன.
  • ஏற்கனவே 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் காரைக்குடி புதுக்கோட்டை திருவண்ணாமலை நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்தார்.
  • இப்படி நகர்ப்புற வசதிகள் வளர வளர நகராட்சி நிர்வாகமும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. சுற்றுசூழல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-பூஜா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

உலகின் மிகப்பழமையான குகை ஓவியம்

புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம்

போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share