ரஷ்யாவில் பிரதமர் மோடி Modi second day in russia
- செவ்வாய்கிழமை(09/07/2024), 22வது ஆண்டின் இருதரப்பு மாநாட்டில், பிரதமர் திரு மோடி, ரஷ்யா- உக்ரைன் போருக்கான தீர்வு ,போர்க்களத்தில் இல்லை என்று கூறியநிலையில், அதுகுறித்து அவர் மாநாட்டில் பேசுவார் என்று எதிர்பார்க்கப் படுகின்றது .Modi second day in russia
- இரு நாட்டு தலைவர்களும் , திங்கட்கிழமை, மாலை சந்தித்துக்கொண்டனர். மோடியின் வருகைக்கான நோக்கத்தை தெளிவுபடுத்தவும் , கருத்து பரிமாற்றத்திற்கானது இந்த சந்திப்பு.
- செவ்வாய்க்கிழமை முறையான பேச்சுவார்த்தையில், இந்தியாவின் முதன்மையான நிகழ்ச்சி நிரலில் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் ரஷ்ய இராணுவத்தில், பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை வெளியேற்றுதல் போன்றவை இடம்பெறும்.
- ஜூனில் , மீண்டும் பதவியேற்ற பிறகு, அது திரு. மோடியின் முதல் இருதரப்பு வெளிநாட்டு பயணம் ஆகும்.
- நிகழ்ச்சி நிரலில், பொருளாதார செய்திகள் பெரும்பாலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- போர்க்களத்தில் மோதல், ஒரு தீர்வல்ல , இரு கட்சிகளும் மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்.
- மாஸ்கோவிற்கு, புறப்படுவதற்கு முன் ,புறப்படும் அறிக்கையில் திரு. மோடி, இருதரப்பு உறவுகளின் முழு ஆய்வு ,உலகளாவிய கண்ணோட்டங்கள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் அவர் நண்பர்,ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அறிந்து கொண்டதாக கூறியிருந்தார்.
- அமைதியான மற்றும் நிலையான பிராந்தியத்திற்கு நாங்கள் ஆதரவான பங்குவகிப்போம் ஆனால், இரு நாடுகளுக்கு நடுவில் இந்தியா மத்தியஸ்தம் செய்யாது, ஆனால் சிக்கலைத் தீர்ப்பதில் முக்கிய ஆதரவளிக்க தயாராக உள்ளது என்பதைக் குறிக்கிறது.
- ரஷ்யா வட்டாரங்களில், புதிய தூதரகங்களை திறக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர் என்று தெரிவித்தன.
- இராணுவம் குறித்து எந்த புது ஒப்பந்தமும் தெரிவிக்கப்படவில்லை ,மேலும் புதிய ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
– வர்ஷா செல்வச்சந்திரன்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம்