- அமித் ஷா current affairs tamil bharat’s lungs
- ஞாயிற்றுக்கிழமை (14/ 07/24), இந்தூரில் நடைபெற்ற தோட்டக்கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா .BHARAT’S LUNGS
- அந்த தோட்டக்கலை நிகழ்வில் ஒரே நாளில் நாடுமுழுவதும் 11 லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
- மாநிலங்களுக்கு ஒரு கல்லூரி என, 55 கல்லூரிகளை மெய்நிகர் மூலம் துவக்கி வைத்தார் இந்த கல்லூரிகள் மாநில அரசால் துவக்கிவைக்கப்பட்டு தேசிய கல்விக் கொள்கையின்(2020) கீழ் நடத்தப்படும்.
- இந்த தோட்டக்கலை நிகழ்ச்சி மத்திய பிரதேஷ் முதல் அமைச்சர் மோகன் யாதவால் இந்த மாதத்தில் துவக்கிவைக்கப்பட்டது “தாயின் பெயரில் ஒரு மரம்”என்று பிரதமர் நரேந்திர மோடி ,ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அன்று துவக்கிவைத்த நிகழ்ச்சி இது .
- அமித் ஷா நகரின் ரேவதி ரங்காவில் உள்ள பி.எஸ்.எப் வளாகத்தில் யாதவ் மற்றும் மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாஉடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
- நாட்டின் 12% காடுகளுக்கு,மத்தியப் பிரதேசம் பங்களிக்கிறது என்றும், அந்த மாநிலத்தை பாரதத்தின் நுரையீரல் என்றும் கூறினார். current affairs tamil bharat’s lungs
- இந்தூரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 51 லட்சம் மரக்கன்றுகளை நட அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்
- அதே சமயம் மாநிலத் தலைநகர் போபாலில் 40 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனையாக அங்கீகாரம் பெற்றது.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…
-வர்ஷா செல்வச்சந்திரன்.
காங்கிரஸ் கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு?
புத்தரை வழங்கிய இந்தியா, யுத்தத்தை ஏற்காது…
சம்விதான் காய திவாஸ் Vs மோடி முக்தி திவாஸ்!