சம்விதான் காய டிவாஸ்
- ஜூன் 25 , அவசர நிலை 1975 இல் பிரகடனம் செய்யப்பட்டது . இதையொட்டி , ஜூன் 25 ஆம் தேதியை சம்விதான் காய திவாஸ் அனுசரிக்கப்பட வேண்டும் என்று, வெள்ளிக்கிழமை (12/07/24) ஒன்றிய உள்துறை அமைச்சர் , அமித் ஷா தெரிவித்தார் .
- அரசிதழ் அறிவிப்பின் படி , இந்த பெயருக்கு ஆங்கில பெயர் இல்லை எனவும், அப்படியே இந்த வார்த்தையை மொழி பெயர்ப்பு செய்தால் அரசியலமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினம் என்பதே இதன் பொருளாகும் .
- இந்தியாவின் அரசியலமைப்பு காலாவதியாகும்போது என்ன நடக்கும் என்பதை நினைவூட்டும் விதமாக இந்த நாள் செயல்படும், அவசரநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகவும், இந்தியாவின் இருண்ட வரலாற்றை கட்டவிழ்த்த காங்கிரஸ் என்று மோடி குற்றம் சாட்டினார்.
- காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் ,இந்திய மக்களுக்கு முன்பிருந்தே, 10 வருடங்களாக அறிவிக்கப்படாத அவசரநிலையை விதித்த மோடியின் ஆட்சி,
- மோடி முக்தி திவாஸ் (மோடி நாளில் இருந்து விடுதலை) என வரலாற்றில் இடம்பெறும் என்றார் .
- அரசிதழ் அறிவிப்பில் , ஜுன் 25 -1975இல் நடந்த அதிகார துஷ்ப்ரயோகத்தில் பாதிக்க பட்ட இந்தியர்கள் மற்றும் அரசியலமைப்பின் மீதும், இந்தியாவின் உறுதியான ஜனநாயகத்தின் மீதும் நிலையான நம்பிக்கை கொண்டுள்ளனர்.
- எனவே இந்தியா அரசாங்கம் ஜூன் 25 ஆம் தேதியை சம்விதான் காய திவாஸ் என்று அனுசரிக்கவும் , அதிகார துஷ்ப்ரயோகத்தில் பாதிக்க பட்ட இந்தியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இனி எதிர் காலத்தில்இது போன்று துஷ்ப்ரயோகம் எதுவும் நடக்காமல் இருக்க இந்த நாள் சம்விதான் காய திவாஸ் என்று அனுசரிக்க படும் என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விழிஞ்சம் துறைமுகத்திற்கு வந்த விருந்தாளி !
திரிபுராவில் தீ போல் பரவும் எச்.ஐ.வி
புத்தரை வழங்கிய இந்தியா, யுத்தத்தை ஏற்காது…
+1
+1
+1
+1
+1
+1
+1