அமைதி மாநாட்டில் திரு.மோடி modi in austria
- சுவிட்சர்லாந்து,அமைதி மாநாட்டில் தீர்மானித்தபடி,மேற்கு மற்றும் உலகளாவிய தெற்கும், ஒருங்கிணைத்து ஒன்றான பாதையில் செல்லவேண்டும் மேலும் உக்ரைன் போர் முடிவிற்கு வர வேண்டும் என்ற விஷயத்தில் இந்தியா தீவிரமாக இருக்கிறது . modi in austria
- ரஷ்யா அழைக்கப்படாத சுவிட்சர்லாந்து மாநாட்டில்,இந்தியா, முக்கிய பங்கு வகித்த போதும் சமாதான அடிப்படையில் உக்ரனின் பிராந்திய தீர்மானத்தில் இந்தியா, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- சமாதானம் என்பது இருதரப்பினரும் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவே தவிர, ஒருவர் எடுக்கும் முடிவு அல்ல என்பதில் இந்தியா தீர்மானமாக இருக்கிறது.
- “உக்ரைனில் நீடித்த அமைதியை அடைவதற்கு அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பது மற்றும் பேச்சுவார்த்தைக்கு இடையே ஒரு நேர்மையான மற்றும் அக்கறையுள்ள ஈடுபாடு தேவை என்று இரு தரப்பும் நம்புகின்றன மேலும் சர்வதேச சட்டம் மற்றும் சாசனம் அடங்கிய அமைதியான தீர்மானத்தை எளிதாக்குவதற்கான கூட்டு முயற்சிகளை இரு தலைவர்களும் ஆதரித்தனர்”என்று கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .
- இந்தியா உலகிற்கு புத்தரை வழங்கியது யுத்தத்தை அல்ல,மேலும் அது அமைதி மற்றும் செழிப்பை எப்போதும் கொடுக்கும்,மேலும் அதன் பங்கை இந்த 21ஆம் நூற்றாண்டில் வலுப்படுத்த உள்ளது.
- இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வியன்னாவில் வசிக்கும் இந்தியர்களை சந்திக்கும் போது, இந்தியா மிக உயர்ந்த மைல்கல்லை அடைய முயற்சிசெய்கிறது என்று மக்களை சந்தித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
- 41 வருடத்திற்கு பிறகு , அமைந்த இந்த முதல் பயணம் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் ,75வருட நட்பை கொண்டாடும் விதமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- ஜனநாயகம் , இரு நாடுகளையும் ( இந்தியா – ஆஸ்திரியா) இணைக்கிறது மேலும் சுதந்திரம், சமத்துவ மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மரியாதை போன்றவை பெரும் பங்கு வகிக்கிறது .இரு நாடுகளும் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதை பிரதிபலிக்கிறது .
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை