’அடேங்கப்பா’.. விஜய்யை கடுமையாக ”வறுத்தெடுத்த” சிபிஐ எம்.பி.!

Published On:

| By Mathi

விஜய்யை விமர்சித்த சுப்பராயன்

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் நடவடிக்கையை ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மக்களவை எம்.பி. சுப்பராயன் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக சுப்பராயன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சட்டமன்றத்தில், சட்டமன்ற ஜனநாயகம் பட்ட பாடு, தாளம்படுமா? தறிபடுமா?

ADVERTISEMENT

முதல்வர் பேசிய முறை, அவரது உடல் மொழி, தம்பி உனக்குத் தெரியுமா? என்று கேட்ட தோரணை!

சகிக்கவே முடியாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஜனநாயகம் ஓடி ஒளிந்து கொண்டது!

ADVERTISEMENT

ஓடி விடாதீர்கள் என்று சொல்லி விட்டுப் போனவர், ஜனநாயக மரபை ஓட, ஓடவிரட்டி அடித்து விட்டார்!

கையில் ஆதாரம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே… ! எதற்கு இந்த நாடக அரங்கேற்றம்? இவ்வாறு சுப்பராயன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share