கொரோனா பரவல்: முக கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On:

| By Minnambalam Desk

Covid19

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. COVID-19 Spread

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் முக கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது சுகாதாரத்துறை.

மேலும் சுவாச நோய் அறிகுறி உள்ளவர்கள், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; உடல்நிலை பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும்; தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share