கூட்டுறவு நிறுவனங்களில் 1 கிராமுக்கு ரூ.10,000/- வரை நகை கடன்!

Published On:

| By Mathi

Cooperative-Jewel Loan

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ.10,000/- வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12%-ல் இருந்து 13% ஆக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 7,000/- எனவும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (05.10.2026) நடைபெற்ற முக்கியக் கூட்டத்தொடரில் நகைக் கடன்கள் தொடர்பாகப் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:

கடன் அளவு உயர்வு

நகைக் கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000/- வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வட்டி விகிதத்தில் சலுகை & சீரமைப்பு:

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது.

இதனைச் சீரமைக்கும் வகையில், JL-CC PACCS-க்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம், DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில், PACCS-ன் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share