திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் (Udhayanidhi) கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் (Congress) நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸை இனி சேர்க்கவே கூடாது எனவும் வலியுறுத்தினார். அக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்துக்குக் கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது உதயநிதி ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
