கோவை மாணவி விவகாரம்.. கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் ஞாயிறன்று ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். இதில் காயம் அடைந்த மூவரும் கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூனன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்கு வசதியாக காவல் ஆய்வாளர் லதா என்பரை கூடுதல் விசாரணை அதிகாரியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் நியமித்தார்.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுனன், சூலூர் கந்தசாமி , சிங்காநல்லூர் ஜெயராமன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது அனுமதி இன்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு கொடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இதே விவகாரத்தில் தவெக மாவட்ட செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share