கோவையில், SIR படிவத்திற்கு மலர் வளையம் வைத்து இறுதிச்சடங்கு செய்வது போல் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் நடத்தப்பட்ட நூதனப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SIR விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டெல்லி தொடங்கி நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரும் இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கரப்பான் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையர்
SIR நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், SIR படிவத்தின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து இறுதிச்சடங்கு செய்வது போன்ற நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது SIR திட்டத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இக்கட்சியினர் மேற்கொண்ட இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
