பியூட்டி டிப்ஸ்: முகத்தைப் பளபளப்பாக்கும் காபித்தூள் – கற்றாழை ஜெல்!

Published On:

| By Kavi

Coffee with aloe vera Face Pack

முன்பெல்லாம், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் சருமம் தளர்ந்து போவது போன்ற ஏஜிங் பிரச்சினைகள் ஆரம்பிப்பதைப் பார்ப்போம். இப்போதெல்லாம், மாறிவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாக 25, 30 வயது உள்ளவர்களே `ஸ்கின் லூஸ் ஆகிறது…’ என்கிறார்கள்.

இதைத் தடுக்க சில எளிய அழகு சிகிச்சைகளை வீட்டிலேயே மேற்கொண்டால் முகச்சருமம் தொய்வடைவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்.

“வெயில் மற்றும் குளிரின் தாக்கம் போன்ற வெளிப்புற காரணங்களினால் சருமம் மூப்படையும் பிரச்சினைக்கு அவகாடோ எண்ணெய் மிகவும் நல்லது.

அவகாடோ எண்ணெய் கிடைக்கவில்லையெனில், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக்கூடப் பயன்படுத்தலாம்.

முதலில் எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் கொடுத்த பிறகு, ஒரு ஃபேஸ்பேக் போட வேண்டும். அதற்கு, இரண்டே இரண்டு பொருட்கள் போதும். காபித்தூள் மற்றும் கற்றாழை. தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்க, ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் சுத்தமான கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளுங்கள்.

இதனுடன் ஒரு ஸ்பூன் காபி பவுடரை சேர்த்துக் கலவையை நன்கு கலந்து கொள்ளுங்கள். இன்ஸ்டன்ட் காபியில் சிக்கரி இருக்கும் என்பதால் சிக்கரியே சேர்க்கப்படாத பிளெயின் காபித்தூளைப் பயன்படுத்துங்கள்.

காபித்தூள் ஒரு ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாகச் செயல்படும் என்பதால், இது கொலாஜனின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

கலந்து வைத்துள்ள இந்தக் காபித்தூள் – கற்றாழை ஜெல் கலவையை முகத்தில் பேக் போல அப்ளை பண்ணுங்கள். 10 நிமிடங்கள் கழித்து துணியைத் தண்ணீரில் நனைத்தெடுத்து முகத்தில் போடப்பட்டுள்ள பேக்கை சுத்தம் செய்யுங்கள்.

பிறகு, உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால், முகச்சருமம் மென்மையாகவும் புத்துணர்வுடனும் இருப்பதோடு இறுக்கமாகி இருப்பதையும் உணர முடியும்.

கடைசியாக, முகத்தில் கொஞ்சம் சன்ஸ்க்ரீனை அப்ளை செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான்… டாலடிக்கும் முகம் பளபளப்பாகும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.

ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களா நீங்கள்? காரணம் இதுதான்!

கிச்சன் கீர்த்தனா: இறால் கீரை அடை!

பாலியல் வழக்கில் Ex ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!

“நிஜ்ஜார் கொலைக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை” : கனடா அரசு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share